பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 & நிலைபெற்ற நினைவுகள் இப்படி அநேகர் வித்தியாசமான முறையில் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர், எனது அறிமுகம் அனைவரையும் வியப்புற வைத்தது. நான் தான் வல்லிக்கண்ணன், நான் தான் நையாண்டி பாரதி, நான் தான் ரா.சு.கி, நான் தான் கோரநாதன், நான் தான் மிவாஸ்கி, நான் தான் பிள்ளையார், நான் தான் சொக்கலிங்கம், நான் தான் வேதாந்தி, நான் தான் சொனா, முனா. நான் தான் கெண்டையன் பிள்ளை, நான் தான் கீராவதாரன், நான் தான் நடுத்தெரு நாராயணன், நான் தான் இளவல், நான் தான் ராசுகிருஷ்ணசுவாமி” என்று அடுக்கினேன். ஏயம்மா, எத்தனை பெயர்கள்!. ஒருவனுக்கு இத்தனை புனைபெயர்களா.. எல்லாப் பெயர்களிலும் ஒருவரே எழுதுகிறார் என்பது ஆச்சர்யமாகத் தானிருக்கு. எதுக்காக இத்தனை பெயர்களை வைத்துக் கொள்ள வேண்டும்?. இப்படி வியந்தார்கள் பலரும. ஒருவர் இத்தனை பெயர்கள் வைத்துக் கொண்டு, நிறைய நிறைய எழுதணும் என்று ஆசைப்பட்டு எழுதினால், ரொம்பகாலம் தொடர்ந்து எழுத முடியாது, சீக்கிரமே ஒய்ந்துபோக நேரிடும் என்று சிலர் கருத்துத் தெரிவித்தார்கள். எப்படியோ, மாநாட்டிற்கு வந்திருந்தவர்களின் கவனத்தைக் கவர்ந்து, பேச்சுக்குப் பொருளாக முடிந்ததே என்ற சந்தோஷம் எனக்கு ஏற்பட்டது. நிறைய எழுத வேண்டும், நானே பத்திரிகை முழுவதையும் நிரப்ப வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டு நான் அதிகம் எழுதவில்லை. பத்திரிகையின் தேவை கருதி அப்படி எழு வேண்டியதாயிற்று. - பத்திரிகைப் பொறுப்பேற்று எழுத நேர்கிற எந்த எழுத்தாளரும் தேவைக்காக அநேக பெயர்களில் எழுத வேண்டிய கட்டாயம் ஏற்படத்தான் செய்யும். 'கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி கல்கி, ரா.கி, கர்நாடகம், எமன் முதலிய பல பெயர்களில் எழுதிக் கொண்டிருந்தார். நாரன துரைக்கண்ணன், துரை, ஜீவா, லியோ, மைவண்ணன் என்றும் வேறு சில பெயர்களிலும் எழுதினார். இப்படி எத்தனையோ பேர் பல பெயர்களில் எழுதியிருக்கிறார்கள். நான் அதிக எண்ணிக்கையில் புனைப் பெயர்களை வைத்துக் கொண்டு எழுத நேர்ந்தது காலத்தின் கட்டாயம் அவ்வளவு தான். எழுத்தாளர். மாநாட்டின் மேடையில் நின்று திருலோக சீதாராம் புதுமைப்பித்தனின் ஓடாதீர்!’ கவிதையை முழக்க மிட்டார். ஒகோ, உலகத்தீர் ஓடாதீர்! உம்மைப்போல் நானும்