பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 & நிலைபெற்ற நினைவுகள் எதிர்பார்த்தார்கள். அதில் வந்த விஷயங்கள் பற்றிப் பேசினார்கள். கடிதங்கள் எழுதினார்கள். சுப.நாராயணன் எழுதிய சிந்தனைக் கட்டுரைகள் நல்ல கவனிப்புப் பெற்றுவந்தன. வாழ்க்கை குறித்தும், சமூகம் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்தும் அவர் தனித்தன்மையான கொண்டிருந்தார். நல்ல திறமையாளர். அவர் நடத்திய சக்தி அலுவலகத்தில் வேலை 'சக்தி ஆசிரியராகப் பணியாற்றிய தி.ஜர. (தி.ஜ. ரங்கநாதன்) சக்தியிலிருந்து விலகி, புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருந்த 'மஞ்சரி’ இதழின் ஆசிரியரானார். மஞ்சரி கலைமகள்' நிறுவனத்தின் பத்திரிகையாகத் தோன்றியது. அவருக்குப் பதிலாக, சுப.நாராயணன் 'சக்தி ஆசிரியப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அந்த நிலையிலும் அவர் ஊழியனின் ஒவ்வொரு இதழுக்கும் கட்டுரை எழுதி அனுப்பிக் கொண்டிருந்தார். 'சக்தி மாத இதழுக்கு நான் கதை எழுதித் தரவேண்டும் என்று கேட்டு வாங்கி என் சிறு கதைகளைத் தொடர்ந்து வெளியிட்டார். ‘சக்தி"க்காக நான் எழுதிய கதைகள் சற்று வித்தியாச மானவையாக இருந்தன. வாழ்க்கையில் தென்படுகிற வேடிக்கை மனிதர்கள் பலரது விந்தை இயல்புகளையும், அவற்றினால் ஏற்படுகிற விநோதமான செயல்பாடுகளையும் நையாண்டித்தன்மையோடு சித்திரித்த கதைகள் அவை. நான் விதம் விதமான கதைகளையும், புதிது புதிதான வாழ்க்கைச் சித்திரங்களையும் கட்டுரைகளையும் எழுத வேண்டும் என்றொரு உள்உந்துதல் பெற்றிருந்தேன். அந்த வேகம் சதா என்னை இயக்கிக் கொண்டிருந்தது. கிராம ஊழியன் மாதம் இருமுறை இதழுக்காக எழுதியதுடன், சிவாஜி வாரப்பத்திரிகைக்கும், சக்தி மாத இதழுக்கும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தேன். அவ்வப்போது என் எழுத்துக்களை விரும்பிக்கேட்ட சில இதழ்களுக்கும் கதை, கட்டுரை என்று எழுதி அனுப்பிக் கொண்டிருந்தேன். o பத்திரிகைகள் எனக்குப் பணம் தரவேண்டும் என்று எதிர்பார்த்ததில்லை. அவை எழுதுகிறவர்களுக்குப் பணம் கொடுக்கக் கூடிய நிலையில் இருந்ததுமில்லை. காலம் தவறாமல் ஒவ்வொரு இதழையும் கொண்டு வருவதற்கே, ஆர்வத்துடன் பத்திரிகை நடத்தியவர்கள் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.