பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் ஆ 137 பற்றிய கருத்துக்களும் உண்டு. பாரதியாரின் புதிய ஆத்திசூடி’ மாதிரி நை, பாரதீயம் என்று தொடர்ந்து எழுதப்பட்டன. நாம் வாழ்க, நமக்கு நாமே துணை என்று தொடங்கி, வாழ்க்கைக்கு வழிகாட்டக் கூடிய தற்காலச் சமூக நடைமுறைகளைப் பரிகாசம் செய்யும் அறிவுரைகள் அடங்கியது நைபாரதீயம். 'காப்பி’ நாளிதழுக்கு உற்சாகமான வாசகர்கள் பலர் இருந்தார்கள். ரெட்டியார், ஊழியன் பிரஸ் தொழிலாளித்தோழர்கள், மற்றும் சிலர் தினசரி வாசகர்களாகி, இதழை வரவேற்றுப் பாராட்டி ஊக்கம் தந்து கொண்டிருந்தார்கள். 'நாம் வாழ்க! நமக்கு நாமே துணை' என்ற உரை பலரை வசீகரித்தன. பின்னாளில் கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணன், வல்லிக்கண்ணன் விளம்பரப்படுத்திய தன்னம்பிக்கைச் சொற்கள் என்று தனது கட்டுரையில் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார். எழுத்து என்பது எனக்கு உயிர்மூச்சாகவும், பொழுதுபோக்கு விளையாட்டாகவும், உற்சாகம் ஊட்டும் உந்துசக்தியாகவும் அமைந்திருந்தது. பணம் பண்ணுவது பற்றியோ, வாழ்க்கை வசதிகள் தேடிக்கொள்வது பற்றியோ எண்ணாமல் எப்போதும் வகைவகையாக எழுதுவதில் மகிழ்ச்சியும் மனநிறைவும் கண்டேன். புத்தகங்கள் படிப்பது என் சந்தோஷத்தை அதிகப்படுத்தியது. கிராம ஊழியன் ஆசிரியர் என்ற பெயர் வந்ததே தவிர எனக்குச் சம்பளம் அதிகமாகக் கிடைத்து விடவில்லை. ஊழியன் நிறுவனத்தில் நான் சேர்ந்தபோது எனக்கு இருபத்தைந்து ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. சிறிது காலத்துக்குப் பிறகு அது முப்பது ரூபாய் என்று ஆக்கப்பட்டது. ஆசிரியர் என்றானதும் சம்பளம் நாற்பது ரூபாயாக உயர்ந்தது. அதற்கு மேல் என் சம்பளம் உயர்த்தப்படவில்லை. நான் அது பற்றிக் கவலைப்படவில்லை. சம்பளம் பற்றி எண்ணவேயில்லை. என் இஷ்டம்போல் தாராளமாக எழுதுவதற்குச் சுதந்திரம் இருந்தது. எனது வேலையில் யாரும் குறுக்கிட்டதுமில்லை. இதை எழுது, அதை எழுதாதே என்று கட்டுப்பாடுகள் விதிக்க யாருமில்லை. அதுவே எனக்குப் போதுமானதாக இருந்தது. என் எழுத்துக்கள் பத்திரிகைகளில் வந்தன. அச்சில் வராமல் கையெழுத்து நிலையிலும் ஏகப்பட்டவை இருந்தன. நான் மேலும் மேலும் எழுதிக் கொண்டிருந்தேன். பலவிதமான சிறுகதைகள், கட்டுரைகள், வசனகவிதைகள், சொனா, முனாவின் சொக்குதங்க