உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் ஆ 145 அவரிடம் இருந்த மிகப்பெரிய ஆயுதங்கள் "எழுத ஒரு பேனா, ஒரு நோட்டு” பயணத்தின்போது படிக்க ஒரு புத்தகம், முதலியவைகள்தான். எங்கள் வீட்டில் குளிக்கவும். குடிக்கவும் தாமிரபரணித்தண்ணிர்தான் என்றேன். அதைக் கேட்டு அவர் ரொம்பச் சந்தோசப்பட்டார். தாமிரபரணித் தண்ணிர்மேல் அவருக்குப் பெரிய காதலே இருந்தது. “சின்னவயதில் இருந்தே நான் தாமிரபரணி நதியோடு சினேகிதமாய் இருந்தேன். ராஜவல்லிபுரத்தில் வசிக்கும்போது, தாமிரபரணி ஆத்துக்கு நடந்தேபோய் ஆத்தில் முங்கிக் குளிப்பதில் எனக்கு அளவில்லாத ஆனந்தம் இருந்தது. பின்னாளில் எனது இளம்பிராயத்தில் திருநெல்வேலி டவுணில் நாங்கள் குடியிருந்தபோது, நான் அதிகாலையிலேயே எந்திரிச்சி, ஒரு வேப்பங்குச்சியை ஒடித்து அதன் துணியைப் பல்லால் கடித்து அதையே ஒரு 'பிரஸ் போல ஆக்கி அதைக்கொண்டே பல்லைத் தேய்த்துக் கொண்டு ஆற்றைப் பார்த்து நடப்பேன். இடையில் மறைவான இடம் பார்த்துக் காலைக்கடன்களைக் கழித்துவிட்டு தாமிரபரணி ஆத்துக்குப் போய் முங்கி, முங்கிக் குளித்துவிட்டு வருவதில் எனக்கு அலாதியான ஒரு சுகம் இருந்தது. பின்னால் நான் சென்னையில் குடியேறிய போது, அடிக்கடி தாமிரபரணியை நினைத்து ஏங்கி இருக்கிறேன். நெல்லை நண்பர்கள் திருநெல்வேலியிலோ, அல்லது அதை ஒட்டிய ஊர்களிலோ இலக்கிய விழா இருக்கிறது என்று சொல்லி என்னை அழைத்தால் நான் மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டு, திருநெல்வேலிக்கு வந்துவிடுவேன். வந்து நேரே, தாமிரபரணி ஆத்துக்குத்தான் போவேன், குளிக்க திருநெல்வேலி என்றதும் என் மனக்கண்ணில் தாமிரபரணி நதிதான் ஒடும். தாமிரபரணி ஆத்தில் முங்கிக்குளிப்பதே தனிசுகம் தான் தாமிரபரணித் தண்ணிரில் குளிப்பதும். அந்த ஆத்தின் தண்ணிரைக் குடிப்பதும்தான் எத்தனை ஆனந்தமான அனுபவங்கள் என்று தாமிரபரணியைப் பற்றிய தன் நினைவுகளைப் பலமுறை நேர்பேச்சில் என்னோடு பகிர்ந்திருக்கிறார். வ.க.அவர்களுக்கு, தாமிரபரணி நதி உருவாகும் இடத்தில் இருந்து நடக்கத்துவங்கி, அந்நதி கடலில் சங்கமமாகும் இடம் வரை நடந்தே செல்லவேண்டும். அப்படி நடந்து பெற்ற