பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 % நிலைபெற்ற நினைவுகள் உடல் குறை உள்ள பிள்ளைகளுக்குப் பேச வேண்டும் என்றதும் மிகுந்த சந்தோசத்தோடு நிகழ்ச்சிக்கு ஒத்துக் கொண்டார். శ్చ.శ్రీ, மாலை மூன்று மணி அளவில் நிகழ்ச்சி ஆரம்பித்தது. நண்பகல் உணவு உண்டதும். ஊரிலிருந்து ஆய்க்குடிக்கு நானும் வ.க.வும் புறப்பட்டு விட்டோம். இரண்டு மணிக்கெல்லாம் பள்ளிக்குள் சென்று விட்டோம். பள்ளி நிர்வாகத்தினர், வக'வை அன்போடு வரவேற்றார்கள். “வக அப்பள்ளியைச்சுற்றிப் பார்க்க வேண்டும், உடல்குறை உள்ள மானவர்களுக்கு, குறிப்பாக மூளைவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு எவ்வாறு பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று ஆசைப்பட்டார். நிர்வாகத்தினரே வ.க.வை அழைத்துச் சென்று ஒவ்வொரு வகுப்பறையிலும் பாடம் நடப்பதைக் காட்டினார்கள். வ.க.வும் ஆர்வத்துடன். வகுப்பறைக்குள் சென்று சில மாணவர்களுடன் பேசினார். குறிப்பாக மனநலம் குன்றிய மூளை வளர்ச்சி அற்ற மாணவர்களிடம் ஆர்வத்துடன் உரையாடினார். மூன்று மணிக்கு அப்பள்ளியின் கலையரங்கில் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு யாரைத் தலைவராகப் போடுவது என்ற கேள்வி எழுந்தபோது வ.க. சற்றும் தயங்காமல், இந்த நிகழ்ச்சிக்கு, கழனியூரனைத் தலைவராகப் போடுங்கள்” என்றார். “மன்னன் சொல்லுக்கு மறு சொல் ஏது? எனவே, அன்றைய நிகழ்ச்சிக்கு நான் தான் தலைமை தாங்கினேன். வ.க. எங்கே? நான் எங்கே? வ.கவின் விசாலமான மனதிற்கு அந்நிகழ்ச்சி ஒரு சான்று. வ.க. அந்நிகழ்ச்சிக்கு என்னைத் தலைமை தாங்கச் சொன்னதற்கு ஒரு உட்பொளும் இருக்கிறது என்பதை நிகழ்ச்சியின்போதுதான் புரிந்து கொண்டேன். வ.க. அவர்களின் மேடைப் பேச்சு நாம் அறிந்ததுதான். டேப்ரிக்கார்டு போட்டது போன்று மடைதிறந்த வெள்ளம் போல மூச்சு விடாமல் ஏற்ற, இறக்கம் இல்லாமல் ஒரேசீராகப் பேசுவார். ஆனால் அன்று உடல்குறையுற்ற அந்த மாணவர்களுக்கு, உணர்ச்சி மயமாக, ஒரு தேர்ந்த கதை சொல்லியின் லாவகத்துடன். சில நாட்டுப்புறக்கதைகளையும், ஆங்கிலத்தில் இருந்து மொழி பெயர்க்கப்பட்ட நீதிக் கதைகளையும் ஏற்ற இறக்கமான வட்டார வழக்கு மொழி நடையில் வக'சொன்னதை உடல்குறையுற்ற அந்த