பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 & நிலைபெற்ற நினைவுகள் ஒருவாறு என்னுள் எல்லாம் தீர்மானிக்கப்பட்டது. ஒருநாளில் அதிகாலையில் எழுந்து யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பிவிட வேண்டும். ஒரு பையில் இரண்டு வேட்டி, இரண்டு சட்டை, இரண்டு துண்டு, எஸ்.எஸ். எல்.சி. சர்டிபிகேட், புத்தகம், சில தாள்கள். எழுதும் பேனா இவற்றை எடுத்து வைத்து, பையை மறைவாக எவர் கண்ணிலும் படாதவாறு ஓர் இடத்தில் பத்திரப்படுத்தினேன். எனது எண்ணங்களையும் நோக்கத்தையும் விரிவாக எழுதி, நான் வீட்டைவிட்டுப் போகிறேன், தேட வேண்டாம் என்று முடித்து ஒரு நீண்ட கடிதம் எழுதினேன். புறப்படுவதற்கு முன்னதாக அதை, அடிக்கடி திறந்து பார்க்கப்படுகிற ஒரு பெட்டியில் பார்வையில் படும்படியாக வைத்தேன். 1942 மே மாதம் 24 ஆம் நாள். அன்று இரவு சரியான தூக்கம் இல்லை. எப்படி வீட்டைவிட்டு வெளியேறுவது, எப்போது புறப்பட்டுப் போவது எனும் மன உளைச்சல், அதிகாலை ஐந்து மணிக்குக் கிளம்பிவிட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். ஆனால் பின்னிரவில் நன்கு துரங்கிவிட்டேன். திடீரென்று விழித்துபோது மணி ஆறு ஆகியிருந்தது. தல்ல வெளிச்சம் வந்திருந்தது. மற்றவர்கள் விழித்திருக்கவில்லை. அம்மா மட்டும் எழுந்து வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தாள். நான் எனது பையை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு, பெரிய துண்டினால் அதை மூடிப் போர்த்திக்கொண்டு, மாடியிலிருந்து இறங்கிவந்து, கதவைத் திறந்துகொண்டு வெளியேறினேன். நான் வாய்க்காலுக்குப் போவதாக அம்மா எண்ணியிருக்கலாம். தெருவில் இறங்கி வேகமாக நடந்தேன். அண்ணாவோ தம்பியோ எழுந்து வந்துவிடக்கூடாது என்ற பதைப்புடன் அவசரமாக நடந்தேன். திருநெல்வேலி ஜங்ஷன் சேர்ந்து மதுரை ரோடில் நடந்தேன். அந்தக் காலத்தில் அப்பகுதி எல்லாம் அமைதியாக, போக்கு வரத்து நெரிசல் இல்லாமல், ரோடின் இருபுறமும் ஓங்கி வளர்ந்த மருதமரங்கள் நின்ற சூழலாக இருந்தது. பெரிய ஒட்டல்களும் கடைகளும் பரபரப்பான பஸ் நிலையமும் இல்லாமல் இருந்த நாள்கள் அவை. காலப்போக்கில் எல்லாம் முற்றிலும் மாறிவிட்டன. ஏகப்பட்ட கடைகள். எப்போதும் ஜனங்கள், வாகனப் போக்குவரத்தும் நெரிசலும் அதிகமான பிரதேசமாகி விட்டது.