பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் & 41 சாத்துருக்கு அதிகாலையிலே ஒரு பஸ் போகும் 5 மணிக்கு அது புறப்படும் என்று அவர் தெரிவித்தார். ராத்திரி இங்கேயே படுத்துக்கோ என்றும் அவர் அனுமதி தந்தார். அசந்து துரங்கிவிடாதே, பையிலே ரிக்கார்டு ஏதாவது வச்சிருக்கியா? மதிப்பு மிக்க சாமான் ஏதாவது? என்று வினாவினார். அப்படி எதுவும் இல்லை என்று சொன்னேன். எஸ்.எஸ்.எல்.சி. சர்டிபிகேட் புக் இருக்கிறது எனச் சொல்ல வேண்டுமா என்று என் மனசினுள் ஒரு குரல் ஒலித்தது. அது என்ன பெரிய ரிக்கார்டா! மதிப்பு மிகுந்ததா என்று நையாண்டி பண்ணியது மற்றொரு குரல். சரிசரி, கவனமா இரு என்று சொல்லிவிட்டு போலீஸ்காரர் நகரலானார். அவருக்கு என் மீது இரக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும். சட்டென்று நின்றார். என்னைப் பார்த்து, "ஒண்னு செய். என் கூட பஸ் ஸ்டாண்டுக்கு வா. அங்கே படுக்கிறதுக்கு உனக்கு ஏற்பாடு பண்றேன். முதல் பஸ்சிலே சாத்துரர் போகலாம் என்றார். எனக்கு திக்கென்றது. வேண்டாம் சார் நான் இங்கே இரவைப் போக்கிவிட்டு, அதிகாலையில் பஸ் ஸ்டாண்ட் போறேன் என்று சொன்னேன். இவர் நல்லது எண்ணி, என்னை பஸ் நிலையம் கொண்டு சேர்த்து, அங்கிருப்பவரிடம் சொல்லிவிட்டுப் போய்விடுவார். காலையில் எழுந்து பஸ் புறப்படுகையில் நான் பயணம் செய்யாமல் எப்படி நழுவுவது? பஸ்சில் சாத்துரர் போவதற்கு என்னிடம் காசு ஏது என்று என் மனம் புலம்பியது. சரி, இங்கேயே படுத்துக்கொள் என்று சொல்லி விட்டு அவர் நடந்து போனார். உடன் நின்றவர் எதுவும் பேசாமலே அவரைத் தொடர்ந்தார். நல்ல மனிதர் என்று அந்தப் போலீஸ்காரரை எண்ணி மகிழ்ந்தது மனம். அவர் பேச்சிலிருந்து சில சங்கதிகளை நான் புரிந்து கொண்டேன். அப்போது இரவு மணி பத்துக்கு மேலாகியிருந்தது. பத்து மணிக்கு திருநெல்வேலியிலிருந்து ஒரு ட்ரெயின் வந்துள்ளது. அது கோவில்பட்டி ஸ்டேஷனிலேயே நின்றுவிடும்" என்று தெரிகிறது. சாத்துருக்கு முதல் பஸ் அதிகாலை 5 மணிக்குப் புறப்படும். மீண்டும் படுத்தபடி இதை எல்லாம் எண்ணினேன். திருநெல்வேலியில் நான் வீட்டைவிட்டு வெளியேறியதை அறிந்ததும் அம்மா, அண்ணன், தம்பி எல்லோரும் என்ன நினைப்பார்கள், என்ன செய்வார்கள் என்றும் நினைத்தேன். அந்த நினைப்பிலேயே துரங்கியும் போனேன்.