பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 & நிலைபெற்ற நினைவுகள் பிரபல நாடக ஆசிரியர்' என்று புகழ்பெறக்கூடிய அளவுககு அநேக மேடை நாடகங்கள் எழுதிய பெருமை இவருக்கு உண்டு. இரண்டு எழுத்தாளர்களும் சொந்தமாக ஒரு பத்திரிகை நடத்தத் திட்டமிட்டு, அதற்கான தடயுடலாகச் செய்து வந்தார்கள். முதல் இதழ் தியில் வெளிவரும் என்று விளம்பரங்கள் கூறின.

அவர்களைக் கண்டு பேசலாம் என்று, அவர்கள் விளம்பரப்படுத்தியிருந்த முகவரியைத் தேடிக் கண்டுபிடித்தேன். பெரிய வீடுதான். உள்ளே போனேன். உயிர்ப்பின்றி வெறிச்சிட்டுக் ந்த இடம் சில நாற்காலிகளும் மேஜைகளும் கிடந்தன. கிடந்தது அத் ஒரே ஒரு நபர் மட்டும் நாற்காலி ஒன்றில் அமர்ந்து, மேஜை மீது தலை பதித்து உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது பகல் மணி - & - 3. பதினொன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. 'சார் என்று குரல் கொடுத்தேன். அவர் தலையை உயர்த்தி நோக்கினார். யார்? என்ன? என்ன வேண்டும் என்று கேட்டார். நான் எழுத்தாளர் ரா. ஆறுமுகத்தை பார்க்க வேண்டும் என்றேன். ஆசிரியர் ஊரில் இல்லை. சென்னை போயிருக்கிறார் என்று அந்த நபர் தெரிவித்தார். பத்திரிகையைப் பற்றி விசாரிக்கவும், ஒரு இதழ் தான் வந்திருக்கிறது, அடுத்த இதழ் எப்போது வருமோ தெரியாது, ஆசிரியர் சென்னையிலிருந்து திரும்பி வந்ததும் தான் தெரியும் என்று அவர் கூறினார். தமிழன் ஆபீஸ் எங்கே இருக்கிறது? எப்படிப் போகவேண்டும் என்று அவரிடம் கேட்டேன். இடமும் வழியும் சொன்னார். அவர் சொன்ன வழியில் நடந்து, தமிழன் அலுவலகம் சேர்த்தேன். சாதாரணக் கட்டிடம் தான். அருகில், வசதிக்காக பிரப்பம்பாய்த் தட்டிகள் வைத்து அறைகள் அமைத்து, கூரை வேய்ந்த அமைப்பு ஒன்று காணப்பட்டது. அங்கேதான் தமிழன் ஆசிரியப் பகுதி செயலாற்றியது. கோதசண்முகசுந்தரம் இருந்தார். இன்முகத்தோடு வரவேற்றார். X அவர் ஒருவர் மட்டுமே அங்கு வேலை செய்து கொண்டிருந்தார். ஆனால் பலபேர் இருந்து வேலை செய்வதற்கு வேண்டிய நாற்காலிகளும் மேஜைகளும் அந்த அறையில் இருந்தன. ஒவ்வொரு நாற்காலி அருகிலும் தனி அலமாரி, அதில் சில ஃபைல்கள் காணப்பட்டன. அலமாரி மீது நி.சி.நி. ஆசிரியர்', ‘மமுச, ஆசிரியர் நகைச்சுவை ஆசிரியர் கேள்வி பதில் ஆசிரியர் என்றெல்லாம் லேபிள் அச்சிட்டு ஒட்டப்பட்டிருந்தது.