பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் x 59 குறிக்கோளோடு, கல்லூரிப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு, ‘கலா மோகினி'யை நடத்த முன் வந்தவர்.தாம் இலக்கிய உலகில் ஒரு புதிய சகாப்தம் படைக்கப் போவதான ஒரு எண்ணம் - நம்பிக்கைஅவருக்கு இருந்தது. அதனால் 'சாலிவாகனன்’ என்றும், விக்கிரமாதித்தன் என்றும் அவர் தனக்குப் புனைப்பெயர்கள் வைத்துக் கொண்டார். சாலிவாகனன் என்ற பெயரில் சிறப்பாகக் கவிதைகள் எழுதினார். சிறுகதைகள், விமர்சனக் கட்டுரைகள் முதலியவற்றை விக்கிரமாதித்தன் என்ற பெயரில் எழுதிக் கொண்டிருந்தார். விறுவிறுப்பாகவும், கிண்டலாகவும், சூடாகவும் விமர்சனங்கள் எழுதுவதில் அவர் ஆர்வம் கொண்டிருந்தார். அவர் பேச்சோடு பேச்சாக, நீங்க இங்கே எங்கு வந்தீங்க என்று கேட்டார். நான் என் எண்ணத்தைச் சொன்னேன். இரவு இங்கே தங்கிவிட்டு, காலையில் முதல் பஸ்சில் சேலம் போகலாம்னு நினைக்கிறேன். அங்கே சண்டமாருதம் பத்திரிகையில் சேரமுடியுமா என்று பார்க்கணும் என்றேன். விராராஎன்னையே கூர்ந்து நோக்கினார். வேல்சாமிகவியை உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டார். ‘தெரியாது’ 'சண்டமாருதத்துக்கு வரும்படி அவர் எப்பவாவது உங்களுக்குக் கடிதம் எழுதினாரா? 'இல்லை. நானாகத்தான் போய் முயற்சி பண்ணலாமே என்று புறப்பட்டேன்.” 'இப்படி வேலை தேடி பத்திரிகை பத்திரிகையாகப் போவது சரியில்லை. உங்கள் மதிப்பை நீங்களே குறைத்துக் கொள்கிற செயல்தான் அது. நீங்க சேலம் போக வேண்டாம். திருநெல்வேலிக்கே திரும்பிப் போங்க. வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நான் என்னாலான உதவிகளைச் செய்வேன்’ என்று உறுதியாகச் சொன்னார் விராரா. ஆகவே, அன்று இரவு அங்கே தங்கிவிட்டு, மறுநாள் காலையில் எழுந்ததும் விராராவிடமும் தம்பி சந்தானத்திடமும் சொல்லிவிட்டு, திருச்சிராப்பள்ளி ரயில் நிலையம் சேர்ந்தேன். உரிய நேரத்தில் ரயிலில் பயணம் தொடங்கினேன். மீண்டும் திருநெல்வேலிக்கே வந்து சேர்ந்தேன்.