பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் x 81 இந்தியாவிலிருந்து திறமையாகத் தப்பிச் சென்ற சுபாஷ் சந்திரபோஸ், ஐரோப்பாவில் சிறிது காலம் தங்கியிருந்த பின், துணிச்சலாக ஜப்பான் வந்து சேர்ந்தார். இந்தியாவிலிருந்து பிரிட்டிஷாரை வெளியேற்றுவதற்காக, இந்திய தேசிய இராணுவம் அமைத்தார். ஜப்பானியர் அவருக்கு உதவிகள் புரிந்தார்கள். உலக மகாயுத்ததில் அமெரிக்காவும் பங்கு கொண்டது. சோவியத் ரஷ்யா விலகிநின்றது. இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்டுக் கட்சியினர், இது முதலாளிவர்க்கத்துக்கு சாதகமான ஏகாதிபத்தியவாதிகளின் யுத்தம், நாம் யுத்தத்தை ஆதரிக்கக் கூடாது, பிரிட்டிஷாருக்கு உதவக்கூடாது என்ற பிரசாரம் செய்து வந்தார்கள். ஹிட்லரின் சேனை வேகமாக ஐரோப்பாவில் முன்னேறி சோவியத் ரஷ்யாவைக் குறிவைத்துச் சென்றது. தங்கள் நாட்டைக் காப்பதற்காக சோவியத் ரஷ்யா போரில் ஈடுபட வேண்டியதாயிற்று. உடனேயே ئي {ئبهgif ‘மக்கள் யுத்தம்” என்று கம்யூனிஸ்டுக்கட்சியினர் முழக்கமிடலாயினர். ஹிட்லரை எதிர்த்து நடக்கும் யுத்தத்தில் நம்மாலியன்ற ஆதரவும் உதவிகளும் புரிய வேண்டும் என்று அவர்கள் மக்களிடையே பிரசாரம் செய்தார்கள். ‘நேதாஜி” என்று சிறப்புப் பெயர் பெற்றுவிட்ட சுபாஷ் சந்திரபோஸ், டில்லி சலோ" என்ற கோஷத்துடன், பிரிட்டிஷாருக்கு எதிராக இந்தியாவை நோக்கிப் படையெடுக்க ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தார். இந்தியாவிலும், காந்திஜி தீவிர எதிர்ப்பைக் காட்டி வெள்ளையரை எதிர்க்க அனுமதி அளித்தார். வெள்ளையனே, வெளியேறு’ எனும் பேரொலி நாடு நெடுகிலும் பரவியது. க்விட் இண்டியா மூவ்மென்ட் வேகம் பெற்றது. காந்திஜியே எதிர்பாராத விதத்தில் நாடு முழுவதும் மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள். தபால் பெட்டிகளை தகர்த்தார்கள். தந்திக் கம்பிகளை அறுத்தார்கள். தந்திக் கம்பங்கள் முறிக்கப்பட்டன. போலீஸ் ஸ்டேஷன்கள், ரயில்வே நிலையங்கள் போன்ற அரசாங்க அலுவலகங்களுக்குத் தீவைத்துக் கொளுத்தினார்கள். 1942 ஆகஸ்டுப் போராட்டம் வரலாற்று முக்கியத்துவம் பெற்றதாயிற்று. ஏராளமான பேர் கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டார்கள். கிளர்ச்சிகள் அடக்கி ஒடுக்கப்பட்டன.