பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 & நிலைபெற்ற நினைவுகள் பத்திரிகை சம்பந்தமான அலுவல்கள் பலவற்றை இராம. மருதப்பன் எனக்குக் கற்றுத் தந்தார். முக்கியமாக, அச்சுக் கோர்த்து வந்த பிரதிகளைச் சரிபார்த்து பிழைகளைத் திருத்தும் முறையை . புரூஃப் பார்ப்பதை - அவர் விளக்கமாகச் சொல்லிப் புரிய வைத்தார். அவர் நல்ல நண்பனாகவும் சீரான வழிகாட்டியாகவும் விளங்கினார். மாலை நேரங்களில் அமைதியான இடங்களுக்கு உலாவ அழைத்துப் போனார் அவர் பல விஷயங்கள் பற்றியும் பேசினார்; ஊரின் பெருமைகள், அண்டை அயல் ஊர்களின் ‘புரவோலங்கள், நாட்டு நடப்புகள் பற்றி எல்லாம் தெரிவித்தார். 'செட்டியாருக்கு ஆசை அதிகம் இருக்கு. அதெல்லாம் நடைமுறையில் எவ்வளவு சாத்தியப்படும் என்பது போகப் போகத் தான் தெரியும் என்று இராம. மருதப்பன் சொல்லி வைத்தார். விரைவிலேயே எனக்கு அது புரிவதற்கு சந்தர்ப்பம் உதவியது. நான் அங்கு வந்து சேர்ந்து பத்து நாள்கள் ஆகியிருந்தன. ஒருநாள் இரவு ஒரு ஏழு மணி இருக்கும். ராசி சிதம்பரம் வந்தார். என்னைத் தேடி யாராவது வந்தார்களா என்று கேட்டார். யாரும் வரவில்லை என்றேன். பொதுவான விஷயங்களைப் பேசியபடி அவர் நின்றார். சற்று நேரத்தில் வெளியே நின்று யாரோ அவரை அழைத்தார்கள். உடனே அவர் சரி. நான் வாறேன். சும்மாதான் வந்தேன்’ என்று கூறிவிட்டு வெளியேறினார். அங்கு நின்று அவரை அழைத்தது யார், அவர் யாருடன் சென்றார் என்பது எதுவும் எனக்குத் தெரியாது. இருட்டில் ஒன்றும் தெரியவுமில்லை. அது அவர் சொந்த விஷயம், எனக்குத் தெரிந்து என்ன ஆகப்போகிறது என்று இருந்து விட்டேன். ஆனால் மற்றவர்கள் என்னை அப்படி இருக்க விடமாட்டார்கள் என்பது சிறிது நேரத்திலேயே புரிய வந்தது. செட்டியார் வந்து சென்ற சற்று நேரத்தில் ஒரு ஆள் வந்து, ஆச்சி உங்களைக் கூப்பிடுறாக’ என்றார். எந்த ஆச்சி என்று எனக்கு விளங்கவில்லை. அறியாமையோடு அதைக் கேட்டேன். செட்டியார் சம்சாரம் என்று அவர் மென்குரலில் சொன்னார். செட்டிநாட்டில் சாதாரணமானப் பெண்கள் ஆச்சி என அழைக்கப்படுவது வழக்கம் என்பது நான் அறிந்திராதது. திருநெல்வேலிப் பக்கம் வயது முதிர்ந்தவர்களை பாட்டிமாரைத்தான் ஆச்சி என்ற குறிப்பிடுவார்கள். வேலைக்காரர்கள், மற்றும் தாழ்ந்த நிலையில் உள்ளவர்கள், பெரிய வீட்டு’ப் பெண்களை உயர்மட்டத்தினரை ஆச்சி என்று