பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 [ ] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


வீரர்களின் உழைப்பையும், சாதனைகளையும் பயிற்சி முறைகளையும் அறிந்துகொண்டு, அவர்களின் வழிகளை யும் பின்பற்றுவது மிக மிக முக்கியம்.


5. தொடரோட்டம் (Relay Races)


தொடரோட்டம் என்றால் என்ன?


உடலாண்மைப் போட்டிகளிலே, உள்ளத்தைக் கவர்வது, உணர்ச்சிகளை உலுக்குவது தொடரோட்டமே. ஒத்தத் திறமையுள்ள (உடலாளர்கள்) ஒட்டக்காரர்கள் நான்கு பேர்கள் ஒரு குழுவில் இருந்து, தனித்தனியே குறுந்தடி (Baton) யுடன் ஒடி, மற்றவரிடம் கொடுக்க, இவ் வாறு தொடர்ந்து ஓடி முடிக்கப் பெறும் ஒட்டமாகும்.


தனிப்பட்ட ஒருவர் ஒடுவது எளிது. அது அவர் பழகிய, இயற்கையான திறமையைப் பொறுத்தது.ஒருவர் வேகத்துடன் மற்றொருவரின் வேகம் இணைவது தான் கடினம்.


வேகமாக ஓடிவருபவரிடம் உள்ள குறுந்தடியை நின்று கொண்டிருப்பவர் பெற்றுக் கொண்டு ஒட வேண்டும். ஒடி வருபவரின் வேகம் குறையவும் கூடாது. வாங்குபவர் அதற்கேற்றவாறு வேகத்தை ஈடு செய்வது போலவும் இருக்கவேண்டும். அத்தகைய பயிற்சி நால் வருக்கும் தேவை. பழக்கம் தேவை. ஒன்றுபட்டு இயங்கு கின்ற உள்ளமும் குழுப்பற்றும் (Team Spirit) தேவை.


சேர்ந்து ஒடிப் பழகாத சிறந்த ஒட்டக்கார்கள்


நால்வரடங்கிய குழுவை, நன்கு குறுந்தடியை மாற்றப் பழகிய (Exchange) நடுத்தர ஒட்டக்கரார்கள் எளிதாக