பக்கம்:நீலா மாலா.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143

143 சென்றது, பிறகு சென்னை வந்தது, இங்கும் அந்த நாடகத்தை கடத்திக் கவர்னர் கையால் பரிசு பெற்றது-எல்லாவற்றையும் எடுக்கப் போகி றேன். மளமளவென்று பேசிக்கொண்டே போனுர் கோதண்டராமன். 'அப்படியானுல், பூங்குடிக்கே நீங்கள் போய்ப் படம் எடுப்பீர்களா ?” "ஆம், அங்கே போய் அங்கு எடுக்க வேண்டிய காட்சிகளை எடுப்போம்.” "அப்படியானுல், நடிகர்கள் ? ....” இதைக் கேட்டதும் கோதண்டராமன் சிரித்து விட்டார். 'என்ன டாக்டர், இந்த நாடகத்தில் கடித்தவர்களேதான் சினிமாவிலும் கடிக்க வேண் டும். இதில் சம்பந்தப்பட்ட மற்றவர்களையும் படம் எடுக்க கினைக்கிருேம். அது பற்றிப் பேசத்தானே நான் வங்தேன்.” இதைக் கேட்டதும் டாக்டர் தயங்கினர். பிறகு, குழங்தைகளுக்குப் படிப்புத்தான் முக்கியம். இப்போதே பத்து நாள் லீவு எடுத்து விட்டார்கள். சினிமாவில் நடிப்பதென்ருல்...?’’என்று இழுத்தார். கவலைப்படாதீர்கள். நவராத்திரி லீவு வருமே, அப்போது கிராமத்துக்குப் போய் எடுக்கலாம்” “எதற்கும் நாளைப் பிற்பகல் மூன்று மணிக்கு வாருங்கள். மற்றவர்களைக் கலந்து முடிவு சொல்கிறேன்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/145&oldid=1021715" இலிருந்து மீள்விக்கப்பட்டது