பக்கம்:நீலா மாலா.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145

#45 பூங்குடி கிராமத்துக்கும், அங்குள்ள மக்களுக் கும் விரைவில் திரைப்படம் மூலமாகப் புகழ் கிடைக் கப் போவதை நினைத்து கினைத்துப் பரமசிவம் பிள்ளை மிகவும் பெருமைப்பட்டார். தமது பள்ளி யும், பள்ளிக் குழந்தைகளும் தமிழ் தெரிந்த அனை வருக்கும் தெரியப் போகிருர்கள் என்பதை எண் னித் தலைமை ஆசிரியர் மகிழ்ச்சி அடைந்தார். மறு நாள் காலே, எல்லாரும் மகாபலிபுரம், திருக் கழுக்குன்றம் எல்லாம் பார்த்துவிட்டுப் பகல் ஒரு மணிக்குத் திரும்பி வந்தார்கள். குறித்த நேரத்தில் கோதண்டராமன் வந்து விட்டார். டாக்டர் சூரியசேகர், குழந்தைகளையும் பெரியவர்களையும் ஒவ்வொருவராக அழைத்து, கோதண்டராமனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். பிறகு, படம் எடுப்பது பற்றிய விவரங்களைக் கோதண்டராமன் கூறினர்: 'பூங்குடியிலே அதிகமாகப் போனல் பத்து அல்லது பதினைந்து நாட்களில் தேவையான காட்சிகளையெல்லாம் எடுத்து விடலாம். பிறகு, சென்னையிலே சில காட்சிகளை எடுப்போம். அதோடு, நேற்று நீங்கள் பார்த்திருப்பீர்களே, உங்கள் நாடகம் நடக்கும் போது, தமிழக செய்தித் துறையினர் சில காட்சிகளையும், க வர் ன ர் பரிசு கொடுக்கும் நிகழ்ச்சியையும் சினிமாவாக எடுத்தார்களே, அதையும் அவர்களிடம் கேட்டு வாங்கிச் சேர்த்துக் கொள்வோம். இது சம்பந்த மாக இன்று காலையிலே கூடச் சம்பந்தப்பட்டவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/147&oldid=1021719" இலிருந்து மீள்விக்கப்பட்டது