பக்கம்:நீலா மாலா.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147

147 எல்லை யில்லா மகிழ்ச்சி அடைந்தார்கள். மாங் குயில் சிறுவர் சங்கக் குழந்தைகளும், அவர்களுடன் சென்னைக்கு வந்த பெரியவர்களும் பூங்குடிக்குத் திரும்பியபோது அவர்களுக்கு அமோகமான வர வேற்பு அளிக்கப்பட்டது. இதே போலத்தான் மாலாவும் நீலாவும் பள்ளிக்குச் சென்ற போது வாயில் காப்பவர் முதல் தலைமை ஆசிரியை வரை எல்லாரும் அவர்களை மகிழ்ச்சியோடு வரவேற். ருாகள. 'கமது பள்ளிக்கு இவர்களால் மேலும் மேலும் பெருமை சேருகிறது” என்று பெருமையோடு கூறி ர்ை தலைமை ஆசிரியை. ஆலுைம், கீலாவிடத்திலும் மாலாவிடத்திலும் கொஞ்சமாவது கர்வம் இருக்க வேண்டுமே துளிக்கூட இல்லை. வழக்கம் போல் எல்லாருடனும் இனிமையாகவே பழகினர்கள். நீலாவும் மாலாவும் படிப்பிலும் மிகுந்த அக் கறை காட்டி வந்தார்கள். அதிகாலை ஐந்து மணிக்கேஎழுந்து படிக்கத் தொடங்கி விடுவார்கள். நீலாவைப் போல் காமும் கன்கு படித்து முன்னேற வேண்டும் என்று மாலா ஆசைப்படுவாள். முன் பெல்லாம் கணக்கு, விஞ்ஞானம் இரண்டையும் முகத்தைச் சுளித்துக்கொண்டே படிப்பாள். ஆனல், நீலா வந்த பிறகு, அந்தப் பாடங்களிலும் அவளுக்கு ஆர்வம் ஏற்பட்டது. இருவரும் ஒரு வருக்கொருவர் தெரியாததைக் கேட்டுச் சந்தேகத் தைப் போக்கிக் கொண்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/149&oldid=1021721" இலிருந்து மீள்விக்கப்பட்டது