பக்கம்:நீலா மாலா.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

152 "இந்த ஐம்பதாயிரத்திலே ஒர் அழகான கட்ட டத்தைக் கட்டிவிடலாம் அப்படித்தானே ! ஆஹாt கல்ல யோசனை! நல்ல யோசனை ' என்று குதித் தாள் மாலா. டாக்டரிடமும் களினியிடமும் இந்த யோசனை யைத் தெரிவித்தார்கள். அவர்களும் ஆமோதித் தனர். - அன்றே பூங்குடிக்குக் கடிதம் பறந்தது. இந்த யோசனையை எழுதி, 'இது எங்கள் யோசனை. மற்றவர்களது யோசனைகளையும் கேட்டு, நீங்கள் எப்படி முடிவு செய்தாலும் சரி” என்றும் குறிப் பிட்டிருந்தார்கள். எல்லாரும் இந்த யோசனையை அப்படியே மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டனர். கோடை விடுமுறையில் மாலாவும் நீலாவும் பூங்குடி சென்றபோது புதிய பள்ளிக் கட்டடம் உருவாகிக்கொண்டிருந்தது. அதைக் கண்டு அவர்கள் அடைந்த மகிழ்ச்சியை எவராலும் எடுத் துக் கூற முடியாது! நீலா சென்னைக்கு வந்து இரண்டரை ஆண்டு கள் ஓடிவிட்டன. அன்று மாலை நேரம். டாக்டர் சூரியசேகரும் நளினியும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். - 'லோ மிகவும் கெட்டிக்காரி. வழக்கம் போல் எட்டாவது வகுப்பிலும் முதல் இடம் நீலாவுக்குத் தான் ! நம் மாலாவுக்கு இரண்டாவது இடம்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/154&oldid=1021727" இலிருந்து மீள்விக்கப்பட்டது