பக்கம்:நீலா மாலா.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

#74 முகாமில் காலையிலும் மாலையிலும் கட்டாய உடற் பயிற்சி கடக்கும். மற்ற கேரங்களில் ரஷ்ய நண்பர்களுடன் சேர்ந்து மலை ஏறுவார்கள்; நீங்து வார்கள்; விளையாடுவார்கள்; புதிர் போடுவார்கள்; ஒவ்வொருவரது ஊரைப் பற்றியும், மக்களைப் பற்றியும், அவர்களது பழக்க வழக்கங்களைப் பற்றி யும் தெரிந்து கொள்வார்கள். ரஷ்யக் குழந்தைகளின் தேச பக்தி, ஒழுங்கு, கட்டுப்பாடு, துய்மை முதலியவற்றைப் பார்க்கும் போது, 'காமும் இப்படி இருக்க வேண்டும். நம் தேசக் குழந்தைகளும் இப்படி இருக்க வேண்டும்' என்று இந்தியக் குழந்தைகள் ஆசைப்படுவார்கள். ஆர்த்தெக் முகாமிற்கு வந்த ஐந்தாம்நாள் நீலா மற்ற இந்தியக் குழந்தைகளுடன் காலை உணவு அருங்தச் சாப்பாட்டுக் கூடத்திற்குச் சென்ருள். அப்போது அங்கிருந்த சுமார் கானூறு சிறுவர் சிறுமியர், நீலா, உனக்கு மகிழ்ச்சியான பிறந்த காள்' என்று வாழ்த்துக் கூறினர்கள். அன்றுதான் நீலாவின் பிறந்த நாள் என்பது அப்போதுதான் நீலாவுக்கே தெரிந்தது. மாலாவும். மற்ற இந்தியக் குழந்தைகளும்கூட அப்போது தான் தெரிந்து கொண்டார்கள். அந்த முகாமிற்கு வரும் ஒவ்வொருவருடைய பெயர், முகவரி..பிறந்த நாள், பிறந்த ஊர் போன்ற விவரங்களை அங்கே உள்ள பதிவுப் புத்தகத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம். அன்றுதான் நீலாவின் பிறந்த நாள் என்பதை அப் புத்தகத்திலிருந்துதான் ரஷ்யக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/176&oldid=1021754" இலிருந்து மீள்விக்கப்பட்டது