பக்கம்:நீலா மாலா.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

19 'இன்னும் வைத்தியரது வீட்டிலிருந்து வர வில்லை போலிருக்கிறது” என்ருர் கலெக்டர். வைத்தியர் வீடு பக்கத்தில் இல்லை. அது இன்னொரு கோடியில் இருக்கிறது” என்ருர் பரம சிவம் பிள்ளே, அ .ே த சமயம், குடிசைக்குள்ளேயிருந்து விளக்கைக் கையில் ஏந்தியபடி யாரோ வருவது தெரிந்தது. "யாரது?’ என்று கேட்டார் தலைமை ஆசிரியர். திரியைத் துாண்டிவிட்டு விளக்கைத் தூக்கிப் பிடித்தது அந்த உருவம். அடடே, தலைமை ஆசிரியரா? இதோ எங்கள் எஜமானர். அது யார்? தெரியவில்லையே! என்று அந்த உருவம் கேட்டது. உடனே பரமசிவம் பிள்ளை, யாரது மீனுட்சியா? உன்னைக் கருங்தேள் கொட்டினதாக யாரோ சொன் னர்களே ?’ என்று கேட்டார். கருங்தேளா? என்னைக் கொட்டியதா யார் சொன்னது?’ என்ருள் மீனுட்சி அம்மாள். மூவரும் ஒருவரைப் பார்த்து ஒருவர் விழித் தனர். 'அப்படியானுல் எல்லாம் பொய்தானு ' என்ருர் தலைமை ஆசிரியர். 'பொய்யாக இருப்பதே நல்லது. மெய்யாக இருந்தால் பாவம், அந்தப் பெண் நீலா என்ன பாடு படுவாள்?’ என்ருர் கலெக்டர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/21&oldid=1021570" இலிருந்து மீள்விக்கப்பட்டது