பக்கம்:நீலா மாலா.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

23 பார்த்துக்கொண்டு கின்றேன். அப்போது முரளி வந்து உன் அம்மாவைக் கருந்தேள் கொட்டி விட்டதாம். சத்திரத்துக்குப் பக்கத்திலே இருக்கிற தருமலிங்க வைத்தியர் வீட்டுக்குத் துக்கிப் போயிருக்கிருர்களாம். உன் அம்மா பிழைக் கிறதே கஷ்டம்தானும். யாரோ ஒரு அம்மா சொன்னர்கள்’ என்ருன். அப்புறம் என்னுலே ஒரு வினுடி அங்கே இருக்க முடியுமா ? உடனே வேகம் வேகமாகச் சத்திரத்துப் பக்கமாக ஓடினேன். அங்கே வைத்தியர் திண்னையிலே உட்கார்ந்து வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டிருந்தார். ‘என் அம்மா வந்தார்களா ?’ என்று கேட்டேன். 'இல்லையே! என்ருர் வைத்தியர். எனக்கு மேலும் பயம் ஏற்பட்டுவிட்டது...” 'ஏன் நீலா பயப்படனும்? வைத்தியர்தான் கான் வரவில்லையென்று சொல்லிவிட்டாரே!” நீலா சிரித்துக்கொண்டே, 'இப்போது நான் பயப்படவில்லை. ஆனால், அப்போது பயந்து போனேன். 'அம்மாவைத் துாக்கிக்கொண்டு போகிறபோது வழியிலே ஏதாவது ஆகியிருந் தால்...? வீட்டுக்கே திரும்பக் கொண்டு போயிருப் பார்களோ என்று கினைத்து மிகவும் வேதனையோடு ஒடி வங்தேன். இங்கே வருகிற போது, வீட்டுக்கு முன்னலே காரும், பெரியவர்களும் கிற்கிறதைப் பார்த்ததும் என்னவோ ஏதோ என்று பயந்து போனேன். என் அம்மா கல்லபடியாக இருக்க வேணுமென்று கடவுளை வேண்டிக் கொண்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/25&oldid=1021574" இலிருந்து மீள்விக்கப்பட்டது