பக்கம்:நீலா மாலா.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

40 எஸ். எஸ். எல். சி. வரை நீலாவைப் படிக்க வைப்பதாக விழாவிலே பரமசிவம் பிள்ளை அறி வித்தது, மீனுட்சி அம்மாளுக்கு மிகவும் மகிழ்ச்சி யாக இருந்தது. தலையிலிருந்த ஒரு பெரிய பாரம் கீழே இறங்கியது போன்ற உணர்ச்சி ஏற்பட்டி ருந்தது. ஆனல், பார்வதி அம்மாளின் பேச்சைக் கேட்டதும் அந்த மகிழ்ச்சி எங்கோ ஓடி விட்டது.

  • சந்தர்ப்பம் சரியில்லை. வீட்டுக்குப் போக வேண்டியதுதான் ’ என்று கூறிக்கொண்டே வெளிக் கதவைக் கடந்து வீதிக்குவந்தாள் மீனுட்சி அம்மாள். நீலா கலங்கிய கண்களுடன் அம்மா வைப் பின் தொடர்ந்தாள்.

சிறிது துராம்கூடச் சென்றிருக்க மாட்டார்கள். : நீலா ! இந்த வெள்ளிக் கோப்பையை நம் குடிசை யிலா வைத்துக் கொள்வது? வேண்டாம் : சிறிது நேரம் சென்று எஜமானர் வீட்டுக்கே போவோம்? என்று கூறிவிட்டு, அடுத்த வீட்டுத் திண்னை ஒர மாக அரை மணி நேரம் காத்திருந்தார்கள். பிறகு, திரும்பவும் பரமசிவம் பிள்ளை வீட்டுக்கு வங்தனர். அப்போது சண்டை இல்லை. வாக்கு வாதம் இல்லை. உள்ளே சென்றதும், பரமசிவம் பிள்ளைதான் முதலில் பார்த்தார். அடேடே, மீ கு ட் சி யா நீலாவும்கூட வந்திருக்கிருளே ? என்ன பெட்டி அது......? ஓ ! உன் மகள் நீலா வுக்குக் கிடைத்த வெள்ளிக் கோப்பையா? என்று மகிழ்ச்சியோடு வரவேற்ருர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/42&oldid=1021593" இலிருந்து மீள்விக்கப்பட்டது