பக்கம்:நீலா மாலா.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71

71 'மாலா, நீ செய்ததுதான் அபாரம். ஒரு கி.மி வடித்திலே அன்னங்களையெல்லாம் வாத்துக்களாக மாற்றிவிட்டாயே! இப்போது, இந்தப் படத்தை யார் பார்த்தாலும், பூங்குடியிலுள்ள தாமரைக் குளம் என்று சொல்லிவிடுவார்கள். நேருக்கு நேரா கப் பார்க்கிற மாதிரியே இருக்கிறது” எனறு மன மாரப் பாராட்டினுள் நீலா. 'இதற்கு வர்ணம் கொடுத்தால் இன்னும் அழகாக இருக்கும்” என்ருன், முரளி, 'எனக்கு நல்லபடியாக வர்ணம் கொடுக்கத் தெரியாதே! நீ கொடுப்பாயா முரளி?” என்று கேட் டாள் மாலா. 'எனக்குப் படம் போட வராது. ஆனல், கன் ருகவர்னம்கொடுப்பேன். என் புத்தகத்திலே இருக் கிற படங்கள் எல்லாமே வர்ணப் படங்களாகத் தான் இருக்கும்! எல்லாவற்றுக்கும் வர்ணம் கொடுத் திருக்கிறேன். ஒரு நாள் டிராயிங் மாஸ்டர் அந்தப் படங்களை யெல்லாம் பார்த்துவிட்டு, கன்ருக வர் ணம் கொடுத்திருக்கிருய் ! இது ஒன்றிலாவது திறமை இருக்கிறதே என்று பாராட்டினர்; முது கிலே தட்டிக் கொடுத்தார்.” 'அடடே, அப்படியா!... சரி, நீ இந்தப் படத் துக்கு வர்ணம் கொடு. வர்ணப் பெட்டிதான் கை யிலே இருக்கிறதே! என்ருள் மாலா. உடனே முரளி, அந்தப் படத்துக்கு வர்ணம் தீட்டின்ை. சிறிது நேரத்தில் அந்தப் படம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/73&oldid=1021625" இலிருந்து மீள்விக்கப்பட்டது