பக்கம்:நூலக ஆட்சி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மாவட்ட நூலக ஆணைக்குழு, மதுரை.
பொது நூலக விதிகள்.

அ. பொது விதிகள் :

1. ஒரு வாரத்தில் வெள்ளிக்கிழமை, அவ்வப்பொழுது அறிவிப்புப் பலகையில் வெளியிடப்படும் நாட்கள் தவிர ஏனைய எல்லா நாட்களிலும் நூலகம் திறந்திருக்கும்.

2. நூலகம் திறந்திருக்கும் நேரம்:

காலை ஏழு மணி முதல் பதினொன்று வரை.
மாலை நான்கு மணி முதல் எட்டு வரை.

3. இது பொது மக்களின் இலவச நூலகம். தூய உடையோடும் நல்ல நடத்தையோடும் வருபவரைத்தவிர ஏனையோர் நூலகத்தில் நுழைய முடியாது. இது பற்றிய முடிவு நூலகத் தலைவரைப் பொறுத்ததே.

4. நூலகத்திற்கு வருபவர்கள் முதலில் தங்களுடைய முழு முகவரியை, நுழைவுப் பதிவேட்டில் (Gate Register) எழுதிக் கையொப்பமும் இடவேண்டும். அத்தகைய கையொப்பங்கள் கையொப்பம் இட்டவர்கள் நூலக விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க ஒப்புக் கொண்டதற்குச் சான்றாகக் கருதப்படும்.

5. நூலகத்திற்கு வருபவர்கள், நூல், செய்தி இதழ், படம் முதலியவற்றிலே எழுதவோ அவைகளைக் கிழிக்கவோ கூடாது. படங்களின் மீது வைத்து அச்செடுப்பது அறவே கூடாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூலக_ஆட்சி.pdf/68&oldid=1123199" இலிருந்து மீள்விக்கப்பட்டது