பக்கம்:நெற்றிக்கண்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி § 9

அங்கே தன்னைப் பார்த்ததே அவளைக் கலக்கி நிலை குலையச் செய்திருக்குமென்று எண்ணினான் அவன், கணவன் ஒன்று கேட்க அவள் ஒன்று பதில் சொல்ல நினைவு ஒருபுறம் உடல் ஒருபுறமாக அடுத்த சில மணி நேரங்கள் அவள் தத்தளிப்பதாக அவனால் கற்பனை செய்யவும் முடிந்தது. அவளுக்கு அந்த நிலைமையை உண்டாக்கி யதற்காகத் தன்னைத் தானே கடிந்து கொண்டான் அவன். -

"எவ்வளவு சுலபமாக எவ்வளவு புனிதமாக எவ்வளவு நம்பிக்கையாக எவ்வளவு சத்தியமாக ஒருவர் மற்றொரு வருக்கு விட்டுக் கொடுக்கிறோம்; பாரேன்?-என்ற தன் வாக்கியத்தை நினைவு கூர்ந்தான் அவன். இன்னும் அதிக பட்சமாக இன்னும் பெருந்தன்மையாக இந்த வேதனையை மறந்து அமைதியடைகிற அளவு விட்டுக்கொடுக்கும் பக்குவம் தனக்கு வரவேண்டுமென்று அவனுக்குத் தோன்றியது. மோகத்தைக் கொன்றுவிடு: அல்லால் என் மூச்சை நிறுத்திவிடு'- என்று பாரதி பாடியிருப்பது எத்தனை பொருத்தமாயிருக்கிறதென்று இந்த விநாடியில் வியந்தான் அவன். மோகத்தைப் பொறுத்த வரையில் அது ஒரு சுகமான நம்பிக்கை. அந்த நம்பிக்கை மனிதனிடமிருந்து அழியவும் நேரலாம். ஆனால் அதுவே மனிதனை அழிக்க விட்டுவிடக் கூடாதுதான். எலியட்ஸ் ரோடு காந்தி சிலைப் பகுதி கடற்கரைவரை நடந்து வந் தாகி விட்டது. மறுபடி வந்த வழியே திரும்பினால் துளசி யைச் சந்திக்க நேருமோ என்ற பயத்தில் காந்தி சிலையருகே மேலே ஏறிக் கடற்கரைச் சாலையில் திரும்பி நடந்தான் சுகுணன். கடற்கரையைவிட்டு நீங்கி விரைவில் அறைக்குத் திரும்பினால் போதும் போல் மனத்தில் விரைவு மூண்டிருந் தது. யாரைத் தவிர்க்க விரும்புகிறோமோ, அவர்களையே மறுபடி மறுபடி சந்திக்க நேர்கிற அளவுக்கு இந்த உலகம் எத்தனை சிறியதாயிருக்கிறது.-என்று உலகை எண்ணி வியந்தபடி அவன் அறைக்குப்போய்ச் சேர்ந்தான். சுகுண லுக்குத் தன் மனத்தின் வேதனையை எதிலாவது கொட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/101&oldid=590472" இலிருந்து மீள்விக்கப்பட்டது