பக்கம்:நெற்றிக்கண்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II 2 நெற்றிக் கண்

ஈடுபாட்டையே அறிமுகமாகக் கருதித் தேடிவந்து கண் கலங்க அமர்ந்திருப்பதை அவன் உணர்வது போலவே பார்க்கிற எல்லாரும் உணர்வார்களென்று சொல்ல முடியாது. பல்வேறு இரசிகர்களும், இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும், மாணவிகளும் அடிக்கடி அவனைத் தேடிக் காரியாலயத்திற்கு வருவது வழக்கம்தானென் றாலும், சுற்றியிருப்பவர்களுக்கு அது எந்த விதத்தில் பிடிக்கவில்லை என்பதையும், எந்தக் காரணத்தால் அதைக் கண்டு அவர்கள் உள்ளுற அசூயைப்படுகிறார்கள் என்பதை யும் அவ்வப்போது அவன் அநுமானம் செய்து தெரிந்து கொள்ளத் தவறிவிடவில்லை. நடுநடுவே அழுகையும் உணர்ச்சிப் பெருக்கும் குறுக்கிடுவதைத் தவிர்க்க முடியாமல் அவனிடம் தன்ன்ைப்பற்றிச் சொல்லிக்கொண்டு வந்தாள் அவள். அந்த முகத்தில் எப்போதோ எதனாலோ வந்து தங்கிவிட்ட சோகத்தை நீக்கிவிட்டுப் பார்த்தால் குறுகறுப்பான அழகு நிறைந்த முகம் அவளுடையதென் பதைக் கண்டான் சுகுணன். அந்தப் பெண் சொல்லத் தயங்கிய அல்லது கூசியவற்றைப் பற்றி அதிகமாகத் துளைத்துத் துளைத்துக் கேள்விகள் கேட்காமல் குறிப்பாக உணர வேண்டியவற்றைக் குறிப்பாக உணர்ந்து, கேட்டே அறிய வேண்டியவற்றைக் கேட்டு அறிந்து எந்த விநாடி யிலும் அவளைத் தர்மசங்கடமான நிலையில் வைக்காமல் உரையாடினான் சுகுணன், ரோஜாப் பூக்களின் இதழ்கள் ஒன்றோடொன்று எவ்வவவு வலுவாக அல்லது வலுவில் வாமல் பொருந்தியிருக்கின்றனவோ அ ப் ப டி த் தா ன் பெண்ணின் சொற்களும். மற்றொருவருடைய பதில் வார்த்தை, அதைத் தீண்டும்போதே எதிர்கொள்ளும் போதோ மென்மை தவறினால் அது உதிர்ந்து விடுகிறது அல்லது குலைந்து விடுகிறது என்பது சுகுணனின் கருத்து. வாத்தியங்களில் சுருதி சேர்ப்பதுபோல் பெண்களிடம் நளினமாகப் பேசவேண்டும் என்று அநுபவத்தில் உணர்ந்: திருந்தான் அவன். பழைய தலைமுறையில் தஞ்சை .மாவட்டத்தினைச் சேர்ந்ததும் இந்தத் தலைமுறையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/114&oldid=590485" இலிருந்து மீள்விக்கப்பட்டது