பக்கம்:நெற்றிக்கண்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. I 8 நெற்றிக் கண்

எழுந்து நின்று குமுறினால் அதற்கு எதிராக நெற்றிக் கண்ணைத் திறக்க யாராவது ஒரு வலிமை மிக்க மனிதர் அல்லது மனிதக் கூட்டம் வந்து சேருகிறது. சமூகத்தில் ஒவ்வோர் உண்மைக்கும் எதிராக அந்த உண்மையால் பாதிக்கப்படுகிற ஒரு வலிமையான மனிதனின் அல்லது மனிதர்களின் நெற்றிக்கண் திறந்து அந்த உண்மையை உரைத்தவனைச் சுடவோ, வெதுப்பவோ தயாராயிருக் கிறது. அந்த நெற்றிக்கண் தான் இன்றைய சமூகத்தில் நியாயத்தைச் சிந்திப்பவன் அல்லது சொல்பவனின் பெரிய எதிரி, அந்த டாக்டரம்மாளின் கணவர் யார் என்று நீங்கள் பெயர் சொல்வதற்குக் கூடப் பயப்படுகிறீர்களே: அதற்கு என்ன காரணம்?ா நம்மை அறிந்தே அறியாமலோ, உணர்ந்தோ உணராமலோ, இந்தக் கடுமையான கண்பார்வைக்கு நாம் பயப்படுகிறோம்.'

"பயப்படாவிட்டால் அதன் காரணமாக நம் வாழ்க்கை நிச்சயமாகப் பாதிக்கப்படுகிறதே சார்!’

- "ஒப்புக் கொள்கிறேன் மிஸ் கமலம்: அவர்களுடைய பார்வை நம்மைச் சுடுவதும் நம்முடைய பார்வை அவர்

களைச் சுட முடியாததும் தான் அதற்குக் காரணம்’ என்றான் சுகுணன். - - -

அவன் கூறியவற்றை ஆழ்ந்து சிந்தித்து வியப்பவள் போல் அவள் சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தாள். சிறிது நேரத்திற்குப் பின், - 'உங்களுடைய பயனுள்ள காலத்தை அதிக நேரம் வீணாக்கி விட்டேன் சார்! தயவு செய்து இன்று இந்த நிலையில் எனக்கு ஏதாவது அறிவுரை கூற முடியுமா நீங்கள்...? என்று ஒவ்வொரு வார்த்தையாக நிறுத்தித் தயங்கித் தயங்கித் தொடுத்துக் கேட்டாள் அவள்.

"உண்மையாகவே துன்பப் படுகிறவர்களுக்கு வெறும் அறிவுரையை மட்டும் வழங்கிப் பயனில்லை என்று கருதுகிற வன்.நான். உங்களுக்கு ஆட்சேபனையில்லையானால் என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/120&oldid=590492" இலிருந்து மீள்விக்கப்பட்டது