பக்கம்:நெற்றிக்கண்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. 3 () நெற்றிக் கண்

வவுச்சர் எழுதிக் கொடுத்து இரு நூறு ரூபாய் தன் கணக்கில்: அட்வான்ஸ் வாங்கி அவளுக்குக் கொடுத்தான் சுகுணன். அந்த ரூபாய் நோட்டுக்களை அவனிடமிருந்து வாங்கிக் கொள்ளும்போது கமலத்தின் தளிர் விரல்கள் பயபக்தி: யினால் நடுங்கின.

"ஒருவரை ஒருவர் பழகி அறிந்த பின்னால் கூட நம்ப மறுக்கும் இந்தப் பட்டினத்தில் இப்படி நம்புகிறீர்களே: இது எத்தனை பெருந்தன்மை'- என்று நன்றி பெருகும். குரலில் நாத்தழுதழுக்க ஏதோ சொல்லத் தொடங்கிய அவளை இடைமறித்து, -

! இப்படித் திரும்பத் திரும்ப வியப்பது தான் என்னை அகெளரவப்படுத்துவதற்குச் சரியான வழி மிஸ் கமலம்!'என்று சொன்னான் சுகுணன். அவள் விடை பெற்றுக் கொண்டு போவதற்கு முன். 'எப்போதாவது என் உதவி தேவைப்பட்டால் இங்கே காரியாலயத்துக்காவது என் அறைக்காவது ஃபோன் செய்யுங்கள்' என்று கூறிக். காரியாலய எண்ணையும் அறைவிலாசத்தோடு டெலிபோன் எண்ணையும் குறித்துக் கொடுத்தான் சுகுணன். அவள் தலை: மறைந்ததும் அடுத்த அறையிலிருந்து சர்மா ஓடிவந்து, "குட்டி யாரு?" என்று தம் வயதிற்குத் தாம் அப்படியும் ஆவனை விசாரிக்கலாம் என்பது போன்ற உரிமையுடன் அந்த சமயத்தில் வழக்கமான விஷமம் தொனிக்கக் கேட்டார். அவரிடமுள்ள கெட்டபழக்கங்களில் இதுவும் ஒன்று, சுகுணனுடைய அறைக்குப் புதியவர்களாக யார் தேடி வந்துவிட்டுப் போனாலும் அக்கறையகக அதைக் கவனித்து வைத்திருந்து வந்தவர்கள் தலை மறைந்ததுமே அதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளா விட்டால் மண்டை வெடித்துவிடும் போன்ற பரபரப்புடன் அங்கு வந்து விசாரிப்பார் அவர். பல சமயங்களில் அவருடைய இந்தச் செயலை உள்ளுற வெறுத்திருக்கிறான் சுகுணன். இன்று. ஆவர் வந்து விசாரித்த விதமும் விசாரணை செய்த. ஆார்த்தைகளும் அவனுக்குக் சிறிதும் பிடிக்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/122&oldid=590494" இலிருந்து மீள்விக்கப்பட்டது