பக்கம்:நெற்றிக்கண்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி I 3 I

கொண்டே அதை எடுத்து நாயுடு விடம் கொடுத்தான் .சுகுணன். நாயுடு ஃபாரத்தை எடுத்து கொண்டு ரங்க பாஷ்யத்தின் அறைக்குச் சென்றார். இந்தச் செயல் ரங்க பாஷ்யத்தின் ஆத்திரத்தைக் கிளறும் என்று தெரிந் திருந்தும்- அப்படிக் கிளறினாலும் பரவாயில்லை-தன் வெற்றியை எதிரியின் கைப்படவே ஒப்புக் கொள்ளச் செய்துவிட வேண்டுமென்ற தீரனின் சுபாவத்தோடு நாயுடுவை அனுப்பியிருந்தான் சுகுணன். ஆனால் ரங்க பாஷ்யத்தைப் பற்றி அவன் அநுமானம் செய்தது முற்றி லும் தவறாகப போய் விட்டது. ஆந்து நிமிடங் களுக்குச் பிறகு நாயுடு ஃபாரத்தோடு திரும்பி வந்த போது ஆவலோடு அதை வாங்கிப் பார்த்தால், ‘ஒ. கே.: என்று ஆங்கிலத்தில் எழுதி அதற்குக் கீழே இன்ஷியல் போட்டு லைன் செய்து ஒப்புக் கொண்டிருந்தார் ரங்க பாஷ்யம். அவருடைய இந்தப் பணிவிலேயே ஒரு. பெரிய விரேதத்திற்கு ஆரம்பம் இருப்பது போல் தெரிந்தது. ஆட்டுக்கிடாய்ச் சண்டையில் வன்மமுள்ள எதிரி ஆடு பின் வாங்கினால் இன்னும் வேகமாக முன் வந்து முட்டப் போவ தாகத்தான் அர்த்தம். இதை நினைத்தபடியே அவருடைய அந்தக் கையெழுத்தைப் பார்த்துச் குகுணன் புன்முறுவல் பூத்தான்.

"ஒண்னும் சொல்லலிங்க......மேலேயும் இழேயும் ஏற இறங்கப் பார்த்துப்பிட்டு உடனே கையெழுத்துப் போட்டுட்டாரு' -என்று நாயுடு கூறிய போது. டர்ட்டி ஃபெலோஸ்' என்று சுகுணனின் உதடுகள் முனு. முணுத்துக் கொண்டன. ரங்கபாஷ்யம் பெரிய 'டி.ப்ளமேட்" என்பது அவனுக்குத் தெரியும். யாரையும் முடிவாக விரோதித்துக் கொள்ளாதது போல நடித்து விட்டுத் தேவையான விரோதங்களை யானை போல ஞாபகம் வைத்துக் கொண்டு பின்னால் எப்போதாவது சரியாகப் பழிவாங்கிக் கருவறுப்ப்ார் அவர் என்பதும் அவனுக்குத் தெரியும். ". . . . . , ', °. . . . w.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/133&oldid=590505" இலிருந்து மீள்விக்கப்பட்டது