பக்கம்:நெற்றிக்கண்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி I:63

ஏன்? நான்தான் எழுதினேன் சார்.

ஐ ஆம் வெரி ஸாரி மிஸ்டர் சுகுணன்! எனக்குத் தெரிந்திருந்தால் இந்த விமர்சனம் வந்திருக்கவே விடமாட் டேன். வி......வி ஆர்...... ரன்னிங் எ பிஸினஸ். பிஸினஸ் .பீப்பினைப் பகைச்சுக்கறாப்பல எழுதிடறது சுலபம். ஆனால் பத்திரிகைக்கு அது எவ்வளவு கெடுதலை உண்டாக் கும்னு உங்களுக்குத் தெரியுமோ?"

எனக்கு நியாயம் என்று பட்டதைத்தான் எழுதி னேன்’’

'இது நியாயமே இல்லை! இலட்ச லட்சமாகச் செல வழிச்சுப் படம் எடுத்தவனுக்குப் பெரிய இன்ஜஸ்டிஸ்! வருஷத்துக்கு எழுபத்தையாயிர ரூபாய் அட்வர்டிஸ் மென்ட் இந்தப் பார்ட்டி' யிடமிருந்து மட்டும் நமக்கு வருகிறது என்பது உமக்குத் தெரியுமோ! இல்லையோ? வர வர உங்க போக்கு ஒண்னும் சரியாப்படலை எனக்கு. சர்மாவும் ரங்கபாஷ்யமும் உங்களைப்பத்தி நிறையச் சொல்லியிருக்கா. அதெல்லாம் நிஜம்னுதான் நான் இப்பு நினைக்க வேண்டியிருக்கு. வேறென்ன செய்யறது?’ என்று கொதிப்போடு வினாவிவிட்டு அவன் பதிலையே எதிர் பாராதவராக டெலிபோனை டக் என்று முகத்தில் அறைந்தாற் போல வைத்து விட்டார் நாகசாமி. சுகுணன் எத்தனையோ விதமாகச் சிந்தித்துப் பார்த்தும் அந்தப் படம் குறையற்ற நல்ல படம் என்று விமர்சனம் எழுத வழியே இருப்பதாகத் தோன்றவில்லை. மனச்சாட்சியோடு தான் தன் கடமையை நிறைவேற்றியிருப்பதாக அவன் உண்ர்ந்தான். அதனால் நாகசாமியின் கோபத்துக்கு அவன் பயப்படவில்லை. அவருக்குக் கோபமூட்டித் தூண்டி விடுகிறவர்களைப் பற்றியும் அவன் கவலைப்படவில்லை. ஆனால் அன்றிலிருந்து காரியாலயத்தில் அவனுக்கு மறை முக அவமரியாதைகள் அதிகமாயின. இரண்டு நாள் கழித்து ஒரு நாள் காலையில் அவன் காரியாலயத்துக்கு வந்து அறைக்குள் நுழைந்தபோது டெலிபோன் இலாகா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/165&oldid=590541" இலிருந்து மீள்விக்கப்பட்டது