பக்கம்:நெற்றிக்கண்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 நெற்றிக் கண்

"புகழ், பழி, பொறாமை, பகை, நட்பு, எல்லாம்தான் இதில் இருக்கிறது. நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே.-என்று சிவபெருமானையே எதிர்த்து நின்று நியாயம் பேசிய நக்கீரன் பிறந்தபோதே உலகத்தின் முதல் பத்திரிகையாளன் பிறந்து விட்டான். அவன் பொருளை நாடி நியாயம் பேசவில்லை. நியாயத்தை நாடியே நீதி பேச வேண்டும் என்று பிடிவர்தமாக நீதி பேசினான் பொருட் பயனை நாடி மட்டும் நீதி பேசினால் ஒரு வேளை அந்த நீதியின் தரம்-இன்றைய பத்திரிகைகளின் தரத்தைப் போல் சீரழிந்துவிடும்.'

'இன்றைய பத்திரிகைகளின் தரம் எந்த விதத்தில் சீரழிந்து விட்டதாக நீங்கள் நினைக்கிறீர்கள்? மூன்று இலட்சம் நான்கு இலட்சம் விற்கிற தமிழ்ப்பத்திரிகைகள். எல்லாம் இங்கு இருக்கின்றன. சோதிடத்திற்காக எழுபது பத்திரிகைகள், சினிமாவுக்காக நூற்றுக்கு மேற்பட்ட பத்திரிகைகள் எல்லாம் இங்கு வளர்ந்திருக்கின்றனவே!" "இருக்கலாம்; ஆனால் பண்பாடும், பொது அறிவும் எவ்வளவு வளர்ந்திருக்கின்றன? தயவு செய்து இதற்கு மட்டும் சுருக்கமாக பதில் கூற வேண்டுகிறேன்.'

...சுகுணனின் இந்தக் கேள்விக்கு அவரால் மறுமொழி கூற இயலவில்லை, பேச்சை வேறு பக்கமாகத் திருப்பி னார் அவர். அவன் விடவில்லை, மேலும் விவாதித்தான். 'ஆழமாகச் சிந்திக்காமல் உங்களைப்போல் நாலுபேர் எல்லாம் வளர்ந்துவிட்டதாக மக்கள் நடுவிலும், மேடை யிலும் பேசிவிடுகிறீர்கள். பத்திரிகைக்காகப் பத்திரிகை விற்காமல் சோதிடத்துக்காகவும், சினிமாவுக்காகவும், .பகுத்தறிவுப் போட்டிகளுக்காகவும், பத்திரிகை விற்பது ஒரு பெருமையா? கோவில் வாயிலில் பூக்கடை இருக்கிறது என்பதற்காக மக்கள் கோவிலுக்கு வருகிறார்கள் என்று பெருமைப்பட நியாயமிருக்கிறதா?” - -

'இது குடியரசுக் காலம். மக்களுக்குப் பிடித்த அம்சன் .கள் எல்லாம் பத்திரிகையில் இருக்க வேண்டும். மக்களில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/226&oldid=590603" இலிருந்து மீள்விக்கப்பட்டது