பக்கம்:நெற்றிக்கண்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 2 4 3

கொண்டிருந்தான். ஆனால் அந்த வேதனையிலும் ஒரு மன் நிறைவு இருந்தது. சத்திய வீரன் ஒருவன் மடிந்த போர்க் களத்தில் அவனுடைய 'சத்தியப் பணியைத் தாங்கித் தொடர்ந்து போரிடுகிறேன்-என்ற பெருமிதத்தை உணர் வதன் மூலமே தன் கவலைகளை அவன் மறக்க முடிந்தது.

"இந்தப் பஞ்சைப்பயல்கள் எல்லாம் எத்தனை நாளைக்குப் பத்திரிகையை நடத்திவிட முடியும்? யானை யைக் கட்டித் தீனிபோடற காரியம் இது' என்று நாகசாமி தன்னைப் பற்றி யாரிடமோ அலட்சியமாக்த் தெரிவித் திருந்த செய்தி, சுகுண்ன் காதுவரை எட்டியிருந்தது. வீரனை அவனறிய அலட்சியம் செய்கிறவன் தன்னுடைய அலட்சியச் சொற்களாலேயே அவனுடைய பலத்தைப் பல மடங்கு பெருக்கி விட்டுவிடுகிறான்-என்பதை நாகசாமி அறியமாட்டார். அவர் அலட்சியமாக நினைக்கிறார் என்ப தாலேயே சுகுண்னுக்குத் தன் இலட்சியங்களில் கவனமும் பிடிவாதமும் பெருகியிருந்தது என்னவோ உண்மை, முதன் முதலில் மகாதேவன் 'டைம்ஸை வாராந்திரக் செய்தி அதுபந்தம்போல் தான் சுருங்கிய அளவில் தொடங்கி நடத்தினார். சிறிது காலத்தில் அது தினசரி யோகப் பெருகியது. அப்படி அது தின் சரியாக வளர்ந்து பெருகியபோதே நாகசாமியைப் போன்ற பெரும் பத்திரிகை முதலாளிகளுக்குத் தாங்க முடியாத அகுயையும் -ஆற்றாமையும் உண்டாகியிருந்தது சுகுணனுக்குத் தெரி யும். தன்னோடு தொடர்பில்லாத யாரோ ஒரு சுதந்திரப் பத்திரிகையாளராகிய மகாதேவனின் பத்திரிகை வளர்ந்து தினசரியாகப் பெயர் பெற்றதையே அகுயையோடும், எரிச்சலோடும், எதிர்கொண்ட நாகசாமி தன் காரியாலயத் திவிருந்து விலகிப் போன ஓர் ஆசிரியர் இப்போது அதைப் பொறுப்பேற்று நடத்துகிறார் என்பதை மட்டும் எப்படிப் பொறாமையின்றி எதிர்கொள்ள முடியும்? அவருடைய பொறாமையைக்கண்டு சுகுணன் வியக்கவில்லை. "அப்படிப் பொறாமைகொள்வதுதான் அவர் நிலையிலுள்ளவர்களுக்கு இயல்பு என்று எண்ணினான். அவன். ம்ற்றவர்களுட்ைய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/245&oldid=590622" இலிருந்து மீள்விக்கப்பட்டது