பக்கம்:நெற்றிக்கண்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25.4 நெற்றிக் கண்

தளிர்த்துத் தழைக்கல்ாம். ஆண்ால் இதன் ஆணிவேர் உங்கள் உள்ளத்தில் ஊன்றியிருக்கிறதே வேர் இருக்கிற இடம் வாடினால் அது செடிக்கு மட்டும் நல்லதா என்ன? மணம் என்பது வேரிலிருந்து ஊறும் மூலப் பொரு. ளாயிற்றே?"

'உண்மைதான்! மற்றச் செடிகளுக்கும் துளசிச் செடிக் கும் கெளரவமான வேறுபாடு ஒன்றுண்டு. துள்சி வேரி லிருந்து தளிர் வரை புனிதமாக மணக்கிறது. வாடினாலும் மணக்கிறது. அதன் பெருமையால் அது நிற்கிற மண்ணும் மணக்கிறது...' --

"தவறு: நிற்கிற மண்ணின் பெருமையால்தர்ன் அது: மணக்கவே முடிகிறது."

'நீ உன் பெருந்தன்மையை அளவுக்கதிகமாக நிரூபிக் கிறாய் துளசி நான் இவ்வளவுக்குப் பாத்திரமாகத் தகுந் தவன் தானா என்று எனக்கே இப்போது சந்தேகமாக இருக்கிறது. என்னுடைய குணமோ பிடிவாதம். நான் உன்னிடம் அடிக்கடி பேசும் சொற்களோ கடுமையானவை. இருந்தும் நீ என்னை விடாமல் பிரியத்தினால் துரத்து கிறாயே? இதில் என்ன பயன் கண்டாய் நீ?'.

"பயனும், இலாப நஷ்டமும் பார்க்கிற சிறிய விவகாரி மாக இதை நான் நினைக்கவில்லை. நான் மனப்பூர்வமாக் வேரூன்றியிருக்கும் சத்தியமான மண் எதுவோ அது வாடக். கூடாது. அந்த மண் வாடினால் நானும் வாடியே தீர வேண்டும்...'

'மணந்து கொள்ள முடியாமம் போனபின் மணக்க. நினைத்திருந்தோம் என்ற எண்ணத்திலேயே மணந்து, கொள்வதைவிடச் சிறப்பாக வாழ்கிறோம் நாம்..."

"ஒப்புக்கொள்கிறேன். முதல் முதலாக உங்கள் கடுமையும் ஆத்திரமும் நீங்கி இன்று என்னிடம் ஒரு நல்ல வார்த்தை பேசியிருக்கிறீர்கள். இந்த வார்த்தைகளே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/256&oldid=590633" இலிருந்து மீள்விக்கப்பட்டது