பக்கம்:நெற்றிக்கண்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52. நெற்றிக் கண்,

"என்னுடைய கடிதத்தைப் பார்த்த பின்பும் உங்களுக்கு, மனம் இளகவில்லை?' .

'உன் கடிதம் என் அறையில் போடப்பட்ட தினத்தில் தான் வெளியூருக்குப் போய்விட்ட காரணத்தினால் அன்று: அதைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு இல்லை. இன்று காலை யில் திரும்பி வந்த பின்புதான் நான் அதைப் பார்த்தேன். நீ பல கதைகளும், நாவல்களும் படித்திருக்கிறாய்! அந்த இலக்கிய அப்பியாசம் உனக்கு மனம் உருகும்படியாக ஒரு நல்ல கடிதத்தை எழுதக் கற்றுக் கொடுத்திருக்கிறது.'

தயை செய்து இப்படிக் குத்தலாகப் பேசாதீர்கள்:

நான் விரும்பிப் படித்த நாவல்களும் கதைகளும் உங்களுடை. யவை தான்.'"

"அதற்காக நான் ஏதாவது நன்றி செலுத்த வேண்டு, மென்று நீ எதிர்பார்க்கிறாயா துளசி?"

"இவ்வளவு கடுமையாகக் கேட்டால் நான் என்ன பதில் சொல்வது? கோ வென்று கதறி அழுதுவிடலாம். அதைக்கூட இங்கே செய்துவிட முடியாது. இது உங்கள்" காரியாலயம். இரசாபாசமாகிவிடும். என்னைக் காப்பாற். றிக் கொள்ளாவிட்டாலும் உங்களையும் உங்கள் கெளரவத். தையும் காப்பாற்ற வேண்டியது என் கடமை...'

"காதலின் கெளரவத்தையே காப்பாற்றத் தவறிய வர்களால் கடமையின் கெளரவத்தை அத்தனை சுலபமாகக் காப்பாற்றி விடமுடியுமா என்ன?" -

ஸ்பிரிங் கதவு கிரீச்சிட்டது. யாரோ உள்ளே வருவ, தாகத் தோன்றவே குரலைத் தணித்துப் பேச்சை நிறுத்தி னான் சுகுணன். துளசியும் கண்களைத் துடைத்துக், கொண்டு பதற்றத்தோடு திரும்பினாள். ஃபோர்மென். நம்மாழ்வார் நாயுடு சிரித்துக்கொண்டே உள்ளே நுழைற். தார். அவர் கையில் மெஷினில் ஏற்றுவதற்குத் தயாராக "மேக்கப் செய்யப்பட்ட ஃபாரத்தின் அச்சுத்தாள்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/54&oldid=590421" இலிருந்து மீள்விக்கப்பட்டது