பக்கம்:நெற்றிக்கண்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 நெற்றிக் கண்

'என்னுடைய திருப்தியைப்பற்றி என்ன? என்னுடைய திருப்தி அதிருப்திகளை இன்னொருவர் சம்பந்தப்பட்டவை: களாக இனிமேலும் நான் விட்டுவிட முடியாது என்றுதான் முன்பே சொன்னேனே?'

'சொல்லுங்கள்! நன்றாகச் சொல்லுங்கள். அதனால் எனக்கென்ன? உங்களுடைய திருப்தி அதிருப்திகளை நான் இன்னும் மதிக்கிறேன். அவற்றுக்காகப் பயப்படுகிறேன். அவற்றால் என் மனம் பாதிக்கப்படுகிறது. உருகிச் சாகிற வள் நான்தானே! உங்களுக்கென்ன வந்தது? அடுத்தவர்கள் மனவேதனையைப் புரிந்துகொள்ளத் தெரியாமல் உதா சீனம் செய்வதும், வெறுப்பதும்தான் மிக உயர்ந்த இலக்கிய குணம் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ என்னவோ?..." என்று வார்த்தைகளால் அவனைச் சாடிவிட்டு...இரண்டு கணம் மெளனமாக நின்று-பின்பு மீண்டும், "இதோ வந்து விடுகிறேன்'...என்று கூறிவிட்டுக் கண்களைத் துடைத்துக் கொண்டு, "காலை மலர்' சர்மாவைக் காணச் சென்றாள் துளசி. தான் மறுமொழி கூற முடியாதபடி அவள் சாடிய வார்த்தைகள் இன்னும் சுகுணனின் செவிகளில் நெஞ்சில்

ஆழ்ந்து உறைப்பனவாய் ஒலித்தபடி இருந்தன.

நான்காவது அத்தியாயம்

கடவுளே! மனம் என்பதை ஏன் இத்தனை இரகசியமாகவும், இத்தனை நுணுக்கமாகவும் படைத்தாய்: ஒருவர் மனம் இன்னொருவருக்குப் பூட்டாகவும், ஒருவர் நினைவு இன்னொருவருக்குப் புதிராகவும் ஏன் படைத்தாய்?" - . . .

'உங்களுக்கு என்ன வந்தது? அடுத்தவர்கள் மன வேதனையைப் புரிந்து கொள்ளத் தெரியாமல் உதாசீனம் செய்வதும் வெறுப்பதும்தான் இலக்கியகுணம் என்று நீங்கள் தினைக்கிறீர்களோ? என்னவோ?’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/62&oldid=590430" இலிருந்து மீள்விக்கப்பட்டது