பக்கம்:நெற்றிக்கண்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 • , - நெற்றிக் கண்

கொண்டிருப்பாள். தன்னைப் பழி வாங்குவதற்காகச் சுகுணனே இப்படி ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தாரோ என்றுகூட அவள் கற்பனை ஓடலாம். -

சுருக்கமாக நாயுடு நன்றி கூறி முடித்துவிட்டார். அச்சக ஊழியர்கள் பலர் மணமக்களுக்கு ஏதேதோ பரிசுகள் வழங்கினார்கள். அதில் பெரும்பாலான பரிசுகள் சுகுணனின் பாலைவனத்துப் பூக்கள்’ என்ற நாவலின் விலையுயர்ந்த பரிசுப் பதிப்பாக இருந்தன. வீட்டுக்குப் புறப்படுமுன் அவள் சுகுணனிடம் விடைபெற வந்தாள். வார்த்தைகளைப் பேச நாஎழாத நிலையில் வருகிறேன் என்று பொம்மைப்போல் தலையசைத்தாள். சுகுணனே செயற்கை புன்முறுவலோடு அவளிடம் அவள் கணவனிட மும் சேர்ந்தே இரண்டு வார்த்தைகள் கலகலப்பாகப் பேசி விடை கொடுத்தான்.

"குடும்ப வாழ்க்கை எப்படி முதலில் வீட்டு அன்பையும் பிறகு நாட்டு அன்பையும் வளர்ப்பதற்கு ஏற்ற முறையில் இந்தத் தேசத்தில் வகுக்கப்பட்டிருக்கிறது என்பதை விளக்கி ஒரு கருத்தைச் சொன்னீங்களே அது ரொம்ப ரொம்ப நல்லாருந்திச்சுங்க” என்று அவனைப் புகழ்ந்தார். நாயுடு. -

"என்னய்யாது? திடீர்னு நன்றி கூறுகிற சான்ஸ் இன்று சர்மாவுக்கு இன்லைன்னு என்னைப் பிடிச்சு வம்பிலே இழுத்து விட்டுப்பிட்டீரே?’ என்று சர்மா அவனருகில் வந்து குழைந்தார். -

"அது உங்கள் பிறப்புரிமையாயிற்றிே அதனால் நீங்கள் கோபித்துக் கொள்வீர்களோ என்றுதான் அப்படிச் சொன்னேன் என்று கூறினான் சுகுணன். மறுபடியும் சுற்றி யிருந்தவர்களிடையே சிரிப்புப் பொங்கியது. இத்தகைய பாராட்டுக் கூட்டங்களில் எல்லாம் ஆரம்பத்திலும் முடி விலும், இப்படிச் சில வெற்றுச் சிரிப்பலைகள் பொங்க நடுவே எங்கோ சிலர் மனம் புண்பட்டு அழுது புழுங்குவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/80&oldid=590449" இலிருந்து மீள்விக்கப்பட்டது