பக்கம்:பச்சைக்கனவு.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 C லா. ச. ராமாமிருதம்

கன்னா பின்னான்னு வண்டையா திட்டிக்கிட்டு ஒரு கல்லை வீசி என் மேலேயெறிஞ்சா. .ெ பத் தே ன் புளைச்சேன்னு ஓடி வந்துட்டேன். நான் சின்ன பையனுரங்க!

அவங்க பாசமும் அப்படித்தான். அவங்களுக்கு ஒரு கொளந்தையிருக்குதுன்னு சொன்னேனே அதன் அழகை கேக்கனுமா? என்னாங்க அவரை போட்டால் துவரை மொளைக்குமா? இருந்தாலும் அவங்க பெத்து. மகனில்லியா? அந்தப் பனங்கொட்டைத் தலையன் மேலே அவங்க உசிரையே விட்டுட்டாங்க. நாள் தவறாமே விளக்கு வெக்கற வேளைக்கு வெளியிலே களிப்பு களிச்சுபடி யிருக்கும். அதைப் பார்த்துட்டு எச்சில் துப்பித் துப்பி எனக்குத் தொண்டை கூட நோவு எடுத்துக்கும்.

அந்த மன்மதக் குஞ்சை ஒருத்தரும் பார்க்க முடியாது. அவங்களுக்கே, கலகலப்பான சுபாவம் கிடையாது. ஆளைப் பார்த்தாலே கடிக்க வராப் போலயிருக்கும். எங்களுக்கும் அவங்ககிட்டே ஒட்டல்லே. ஒரே ஒரு தெம்பு தான். ஒரு சட்டி, பானைவேனுமானா சந்தைக்குப் போய் வாங்கி எட்டு மைல் தூக்கி வரணும். இந்தத் தடவை. பொங்கப் பானை நம்ம ஊரிலேயே வாங்கலாமில்ல? அதிலே ஒரு சந்தோஷமில்ல? அப்படியும் இப்படியுமா பொங்கலும் கிட்டக்கிட்ட வந்துட்டுது. அப்பசி போச்சு. கார்த்திகையும் பாதியாச்சு. மார்கழி மள்ளினா பொங்கல்.

இதுக்குள்ளேயும் ஒண்ணு நேர்ந்து போச்சு. அந்தக் குளந்தை இறந்துட்டுதுங்க.

சின்னக் குளந்தை சாவறத்துக்குக் காரணம் வேணுமா? படே படே ஆளெல்லாம் திடீர் திடீர்னு வாயைப் பிளந்துடறாங்க. குளிர் மார்லே தாக்கியிருக்கும். வாயிலே ஊட்டற கூழை மூக்கிலே ஏத்தியிருப்பா. பேச்சுக்கு சொல்றேனுங்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/137&oldid=590795" இலிருந்து மீள்விக்கப்பட்டது