பக்கம்:பச்சைக்கனவு.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 o லா. ச. ராமாமிருதம்

இதற்குள் ஒருவன் ஆrே:பிப்பது போல், 'நல்லா இருக்கையா! நம்ம எல்லாம் என்ன வேற்று மனுசங்களா? ஆபீஸ்தானே?” "யாருக்கு” 'ரெண்டு பேருக்குந்தான் சொல்றேன்’ "எப்பவும் அப்படியே இருக்குமா? இனிமே மிஸஸ். ஆபிஸுக்கு வருவாங்களா?”

'ஏன், ரெண்டு பேருமா சம்பாதிச்சா நோவுமா?" 'இதென்ன, கல்யாணமா, கூட்டு வியாபாரமா?” ஒரே ஆரவாரம். இம்மாதிரிப் பேச்சு வாய்க்கு வாய் பந்தாடியவண்ணமிருந்தது. அவன் வாயில் இரிப்புக் கலையவில்லை; கழுத்தில் கட்டிய டை', நெற்றியிலிட்ட பொட்டு மாதிரி, வாய்க்குத் தரித்த அணியாகப் பதிந்து போயிருந்தது.

'தட்டாமாலை தாமரைப் பூ, சுற்றிச் சுற்றி......' அப்புறம் எல்லாம் முடிந்து அவன் சிநேகிதர்கள் ஒவ்வொருவராக வந்து செலவு பெற்றுக்கொள்ளும் முறையில் கையைப் பிசைகிறார்கள்.

'ரொம்ப நேரமாய்ப் போச்சு. சந்தோஷமாய்ப் போச்சப்பா- ’’

"பாதம் கீர் ஏ ஒன்!” 'அட, எது சோடையாயிருந்தது? ரஸ்ம்- ?” 'சரி சரி, இவன் வாயிலே புனல் வெச்சு இன்னும் ரெண்டு அண்டா கொண்டு வந்து ஊத்தடா-'

போயிட்டு வரோம். நீயும் மிஸஸ்எஸும் ரொம்ப நாள் செளக்கியமாய் இருக்கணும். Good Luck!'

எல்லோரும் போக இன்னும் ஒருத்தன் தான் பாக்கி. அப்பா மழை பெய்து விட்டாற்போல்......

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/159&oldid=590817" இலிருந்து மீள்விக்கப்பட்டது