பக்கம்:பச்சைக்கனவு.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 O லா. ச. ராமாமிருதம்

$

"என் மனைவியே-- 'இல்லை இல்லை-' பதறி, அவன் பிடியினின்று விடுவித்துக் கொண்டு எட்ட நின்றாள். அவள் முகம் வெளுத்தது.

"என்ன இல்லை?” "ஒன்றுமில்லை; என்னை பேரிட்டே கூப்பிடுங்கள்.” எட்ட எட்ட, ஒருவரை ஒருவர் பார்த்துப் பதுங்கி நிற்கும் நிலை அவனால் சகிக்க முடியவில்லை. தலை கிறுகிறுத்தது.

'தட்டாமாலை தாமரைப்பூ

சுற்றிச் சுற்றிச் சுண்ணாம்பு கிட்ட வந்தால் குட்டுவேன் எட்டப் போனால் துப்புவேன்.'

மறுநாள் ஆபிஸுக்குப் போய் தன் இடத்தில் அமர்ந்தான். எதிரே தான் அவள் 'nட்' காலியாக இருந்தது. இன்றிலிருந்தே காலிதான், அந்த இடத்துக்கு வேறு யாரையேனும் வைக்கும் வரை.

பள்ளிக்கூடத்துச் சிறுமிபோல், தலையை ஒரு பக்க மாகச் சாய்த்துக் கவிழ்ந்தபடி அவள் வேலை செய்யும் உருவம் நினைவுபடுத்திக் கொள்கையில் சிரிப்பு வந்தது.

ஒரு நாளும் ஆபிஸுக்கு அவள் நேரத்தில் வந்ததில்லை. ஐந்து நிமிஷமாவது தாமதித்துதான் வருவாள். அப்பழக்கத்தை அவனால் குணப்படுத்த முடியவில்லை. வந்த புதிதில் அவளிடம் இதைப்பற்றிச் சுறுசுறுப்பாய்த் தான் பேச நேர்ந்தது. எதிர் வார்த்தையே பேசாது, சமாதானமும் செல்லாது. கண்ணிருங் கம்பலையுமாக அவள் நின்ற காட்சி இப்போது கண்முன் நின்றது. வெள்ளை மேலாக்கியின் ஓரத்தில் மசிக்கரை. அப்புறம் அவள் நேரம் கழித்து வருவதற்கு தானே அவளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/163&oldid=590821" இலிருந்து மீள்விக்கப்பட்டது