பக்கம்:பச்சைக்கனவு.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 ) லா. ச. ராமாமிருதம்

பக்றீக் க்றீக் ஒரு பாச்சை சப்தம் கொட்ட ஆரம்பித்துவிட்டது. கரும் பலகையில் ஆணியால் கிழிப்பது போல் வேதனையாக இருந்தது.

எனக்கு நீ உனக்கு நான்' என்று வாய் சொல்கிறது. ஆனால் மனம் ஏன் நம்பமாட்டேன் என்கிறது? யாருக்கு யார்?' என்று ஏன் மறுப்புக் கேள்வி போடுகிறது? ஒரே இடத்திலிருந்து வரும் இந்த இரட்டைப் பேச்சுத்தான் ஆளைப் பைத்தியமடிக்கிறது.

அப்புறம் பேச்சு ஒடவில்லை. 'நேரமாகி விட்டது” என்று சொல்லிக் கொண்டே உடம்பில் இல்லாத சோம்பலை முடித்துக்கொண்டு எழுந்தான். வேஷம் வாழ்க்கையின் இன்றியமையாத அம்சம் போலும்!

இருவரும் மாடியேறுகையில், சாமான்கள் அவைகளின்

வழக்கமான அலங்கோலத்தில் இல்லாது ஒழுங்கு பட்டிருப்பது கண்டான்.

"ஒ, மத்தியானமெல்லாம் வேலையாத்தான் இருந் திருக்கிறாய்!”

அவன் முகம் மலர்ந்தது.

ஆம், ஒரு பெண்பிள்ளை வீட்டில் இருந்தால் எவ்வளவு இதவாயிருக்கிறது!

சுத்தத்திற்கே ஒர் அழகு அது அது அதன் அதன் இடத்தில் அதுவே சத்தியத்தின் ஒரு கோட்பாடு. சாமான் களைச் சரியாக வைப்பதில் இவ்வளவு இடம் கூடி வருவதால் இன்னும் நாலைந்து நாற்காலிகள் வாங்கலாம். இப்படித் தாறுமாறாய்க் கிடக்கும் புத்தகங்களை அடுக்க ஒரு ஷெல்ப்”, இன்னமும் சில புத்தகங்கள்

'இது প্ৰাঞ্জমি ৪ক্য 2**

அவள் ஏதோ ஒரு புத்தகத்தைப் புரட்டிக் கொண் டிருந்தாள். அதனுள்ளிருந்து ஒரு படம் நழுவிக் கீழே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/171&oldid=590829" இலிருந்து மீள்விக்கப்பட்டது