பக்கம்:பச்சைக்கனவு.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி C 169

என்பதா வீடு என்பதா? ஒரு கூடம். ஒர் அறை. அவ்வளவு தான். கதவைத் திறந்துகொண்டு அறையுள் நுழைகையி லேயே உப்பு மண் தலைமேல் உதிர்ந்தது. சுவர்களில் மழை ஜலம் வருஷக்கணக்கில் வழிந்து, விசித்திரமான கறைகளை எழுதியிருந்தது. சுவரில் விட்டிருக்கும் ஒட்டை யொன்றை பாட்டி ஜன்னல் என்று காண்பித்து, காற்று பிய்த்துக்கொள்ளும் என்று சிபாரிசு செய்தாள். அதன்வழி நோக்குகையில் மாடுகள் மந்தையிலிருந்து கழுத்து மணிகள் கிண்கிணிக்க வந்து கொண்டிருந்தன.

தினப்படிக்குக் கையாளும் சாமான்களை அவன் பெட்டியிலிருந்து எடுத்து வைக்கயில் அதனுள் துணிகளுக்கு அடியில் கைக்கு ஏதோ கெட்டியாகத் தட்டுப்படுவதை உணர்ந்தான். எடுத்துப் பார்க்கையில் அவனுக்குப் பரிசாக வந்த இருமூக்குக் கிண்ணி என்ன ஆச்சரியம்: இது இங்கு பிரத்தியட்சமாவானேன்? ஆ. இப்போ ஞாபகம் வந்தது. எங்கேயாவது பத்திரப்படுத்துவதற்காகப் பயணப் பெட்டியில் வைத்துவிட்டு பயணம் நேரவே, பெட்டியுடன் அதுவும் வந்துவிட்டது. இதுவும் ஒரு சகுனந்தான். அதை எடுத்துத் துடைத்துப் பெட்டிமேல் வைத்தான்.

பாட்டி சாப்பிடுவதற்கு இட்ட தாமரை இலைக்கு முதற்கொண்டு, பில் பண்ணினாள். ஆனால் அன்றிரவு குத்துவிளக்கு வெளிச்சத்தில் சாப்பிட்ட வற்றல் குழம்பும் கீரை மசியலும் தேவாம்ருதமாகத்தான் இருந்தன.

கிராமத்தில் ஊரோசை எவ்வளவு சுருக்க அடங்கிவிடு கிறது! சுவரில் விட்டிருக்கும் ஒட்டைவழி தெருவில் ராந்தல் கம்பத்தில் எரியும் முறைவிளக்கு மினுக் மினுக்கென்றது.

பாட்டி எப்பவோ சாமானையெல்லாம் ஒழித்துப் போட்டுவிட்டுக் கட்டையைக் கூடத்தில் நீட்டிவிட்டாள். வெகு சீக்கிரத்தில் ஒரு சிறு குறட்டை அவள் மூலையினின்று கிளம்பியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/178&oldid=590836" இலிருந்து மீள்விக்கப்பட்டது