பக்கம்:பச்சைக்கனவு.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 o லா. க. ராமாமிருதம்

தேகத்தோடே பிறந்தது எங்கே மாமி போகும்: எங்கே ஒடறேள், அவசரமா? நில்லுங்கள், நமஸ்காரம் பண்ணுகிறேன்."

'கிழக்கைப் பார்த்துப் பண்ணு. மகாராஜியாக இரு. தோளோடு தாலி தொங்கத் தொங்கக் கட்டிண்டு, பதினாறும் பெற்று-'

பெற்றால் ஆச்சா மாமி! சுந்தா பெருமூச்செறிந்: தாள்: 'தக்க வேண்டாமா? அவளுக்கு அடுத்தடுத்துக் குறைப் பிரசவத்திலேயே நான்கு தவறிவிட்டன.

என்னடி!' சாவித்ரி கர்ஜித்தாள்; எல்லாம் தக்கும், தக்கும். முளைத்து இன்னும் மூணு இலை விடவில்லை. அதுக்குள்ளே இவ்வளவு அலுப்பா?”

அதற்குள் யாரோ அவசரமாய்த் தோளைக் சுரண்டினாள். 'மாமி மாமி, மாமா உங்களையே பார்க்கிறார்.’

மறுபடியும் ஒரே சிரிப்பு. சாவித்ரி திரும்பிப் பார்த்தாள். அவள் கணவர் அவளைப் பார்க்கவில்லை. சங்கீத வித்வான் கச்சேரியில் ஸ்ருதியைக் கணிப்பதுபோல் கழுத்தைத் திருப்பிக் கொண்டு யாருடனோ பேசிக்கொண் டிருந்தார். சாவித்ரி ப்ரமித்து நின்றாள்.

அந்த வேளைக்கென்றே யாருக்குமே தேஜஸ் வந்து விடுமோ? அவர் அப்படி ஜ்வலித்தார். பரந்த நெற்றியில் சந்தனத்தைக் கீறலாய்த் தரித்து, .ெ வ ண் ப ட் டு அங்கவஸ்திரத்தை யோக வேஷ்டியாகப் போட்டுக் கொண்டு தொடைமேல் மிடுக்காய் வைத்த வலக் கையில் கங்கணமும் இரண்டாவது விரலில் பவித்ரத்தடியில் மோதிரத்தில் பதித்த பச்சைக்கல் பளிச்.பளிச்.

மாமி எங்களையும் கொஞ்சம் பார்க்கலாம். மாமா பழைய மாமாதான்!” சாவித்திரியின் விழியோரங்களில் குளுமை பெருக்கெடுத்தது. பழைய மாமாதான். ஆனால்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/185&oldid=590843" இலிருந்து மீள்விக்கப்பட்டது