பக்கம்:பச்சைக்கனவு.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவித்ரி 0 183

தன்னைப் பார்க்க அவளுக்கே சகிக்கவில்லை. தகடுமாதிரி குங்குமம், வேர்வையில் ஒரத்தில் அழிந்து மூக்கின்மேல் வழிந்து ஒடியிருந்தது. தலைமயிரெல்லாம் ஒரே பரட்டை. அதில் பூவிதழ்களும் அட்சதையும் ஒட்டிக்கொண்டிருந்தன. புதுப்புடவை உடம்பில் மூலைக்கு மூலை அசிங்கமாய்ப் புஸ் புஸ்-வெனப் பிதுங்கிக்கொண்டு ஏற்கனவே உள்ள பருமனை மிகைப்படுத்திக் காட்டிற்று. தன்னையும் அறியாமல் ஒரு வெட்கம் அவளைப் பிடுங்கிற்று. தலை கவிழ்ந்தாள். -

"ஐயோடி! எல்லோரும் மாமியைப் பாருங்கள்: மாமிக்கு வெட்கம் வந்துவிட்டதடி!'

'எடுண்டு முகூர்த்தத் தேங்காயை, பஞ்சாமி! ஒருத்தரையும் விட்டுவிடாதேங்கோ. சின்னவர்கள் பெரியவர்கள் வித்தியாசம் பார்க்க வேண்டாம். இங்கே வந்தவர் யாரா இருந்தாலும் சரி, வெறுங்கையோடும் வெறும் வயிற்றோடும் போகக்கூடாது. ஆமாம், சொல்லி விட்டேன்!”

யார் இந்த சவால் அடிக்கிறது? ஒஹோ, சிவராஜனா?

'நன்லாச் சொல்லு, சிவராஜா! காசுபணம் இன்னிக்கு வரும்; நாளைக்குப் போகும். இந்த சமயம் வருமாடா? நீங்கள் எல்லோரும் செளக்கியமாய் இருந்து இத்தோடு போகாமல் உங்கள் அப்பா அம்மா இரண்டு பேருக்கும் சதாபிஷேகம் பண்ணவேணும். இதைத்தான் இப்போ நான் தெய்வத்தை வேண்டிக்கறேன்!'

அதுக்கும் மீனுப்பாட்டி, நீங்கள் வந்து அவர் களையும் எங்களையும் ஆசீர்வாதம் பண்ணவேணும்.'

ஒரே சிரிப்பு. ஏனெனில் மீனுப்பாட்டிக்கு இப்போ, வர ஐப்பசிக்கு வயசு எழுபத்தெட்டு பூர்த்தியாகிறது.

'அதென்னடா அப்படிச் சொல்லிட்டே? உங்கள் கையாலே சதாபிஷேகம் பண்ணிக்க அவளுக்கு கொடுத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/192&oldid=590850" இலிருந்து மீள்விக்கப்பட்டது