பக்கம்:பச்சைக்கனவு.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 C லா. ச. ராமாமிருதம்

பெரிதாய்த்தான் நினைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. நம் குழந்தைகள் ஒற்றுமையோ வேற்றுமையோ அவர் அவர்கள் இருக்கிற இடத்தில் சுகமாயிருக்கிறார்கள் என்கிற செய்தி கேட்டுக் கொண்டிருக்கும்போதே நாம் கண் மூடிவிட்டால் போதும்.

இனி என்ன பாக்கி? எனக்கு நீங்கள்', 'உங்களுக்கு நான்' என்று இருவர்தாம் பாக்கி. இந்த இரண்டிலே யார் முந்தி, யார் பிந்தி என்கிறதுதான் பாக்கி.

உள்ளேயிருந்து பஞ்சாமியின் குரல் கூவிற்று. 'அம்மா சாஸ்திரிகள் கூப்பிடுகிறார். ஒளபாசனத்துக்கு நேரமாகி, விட்டது.'

இந்தச் சமயத்தில் நல்லது பொல்லாதது எல்லா வற்றையுந்தான் சேர்த்து இந்த மனசு எண்ணுகிறது; ஆடிப்பெருக்கில் மட்டை, செத்தை, குப்பை கூளம் எல்லாம் அடித்துக்கொண்டு வருவதுபோல,

அவர் போய் விட்டாரென்றால் அப்போதும் அவளைச் சுற்றித்தான் எல்லோரும் அடித்து வீழ்வார்கள், 'அடி பாவி! இதுவரை இருந்தாயே போதாதா? மஞ்சளும் குங்குமமும் மணக்க நீ போகக்கூடாதா? கொடுத்து வைக்காத கொடும்பாவி, கொடும்பாவி!' என்று துாற்றுவார்கள். வாஸ்தவந்தான், அவள் முந்திக்கொண் டால் அவள்வரை மணந்தான். ஆனால் அப்புறம் அவர் கதி என்ன ஆகிறது?

அவள் மாமியார் உயிரோடு இருக்கையில் சில சமயங் களில் வேடிக்கையாய், குத்தலுக்குக் குத்தலாய்ச் சொல் வதுண்டு; அவர் கொஞ்சம் இலக்கணமாயும் பேசுவார்: “ஒரு பிள்ளையைப் பெற்றவளுக்கு உறியிலே சோறு. நாலு பிள்ளையைப் பெற்றவளுக்கு நடுத் தெருவிலே சோறு. அதனால் கோயில், குளம், கதாகாலrே:பமென்று போய்விட்டு நான் தைரியமாய் நேரங்கழித்து வீடு திரும்பலாம், எப்படியும் கண்டிப்பாய் எனக்கு உறியிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/207&oldid=590865" இலிருந்து மீள்விக்கப்பட்டது