பக்கம்:பச்சைக்கனவு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 0 லன. ச. ராமாமிருதம்

மூன்றங்குல ஆழத்திற்குக் கை அழுந்திற்று விடிவிளக்கின் மங்கிய வெளிச்சத்தில் அதைப் பார்த்தால் ஏதோ எங்கேயோ, வறண்ட பூமியில் குன்றுகள் தடுத்துக் குடங்குடமாய்ப் பெய்ய ஏகமாய்த் தண்ணிரை ஏற்றிக் கொண்டு செல்லும் மேகம்போல்.

அவள் முகத்தில் தவழ்ந்த புன்னகையிலிருந்து அவள் விழித்துக் கொண்டு விட்டாளென்று கண்டேன். ஆனால், கண்ணைத் திறக்கவில்லை.

"என் கவி என்ன யோசனை பண்ணுகிறது?" நான் அவளை ராகம் என்பதால் அவள் என்னைக் கவியென்று கேலி செய்வாள்.

'பெருத்த யோசனைதான்!” 'என்னவோ?’’ 'உன் மயிர் உன்னைவிடக் கறுப்பா, அல்லது நீ அதை விடக் கறுப்பா?’’

கண்ணை விழிக்காது அவள் புன்னகை புரிவது. எவ்வளவு அழகாயிருக்கிறது! சின்னக்குழந்தை தூக்கத்தில் சிரிப்பது போன்று.

'இந்த யோசனை கொஞ்சம் தாமதமாய் வருகிறது.' 'ஏனோ?” 'என்னைக் கட்டிக்கொண்ட பொழுதே தோன்றி யிருக்க வேண்டாமா?’’

'உன் கறுப்பின் இருள் என் மனதில் புகுந்து, அந்தச் சாயத்தில் என்னைக் குருடாக்கி விட்டதே! ஆனால் எனக்கு வெளிச்சம் வேண்டாம். இவ்விருள் என் மனதில் எப்போதுமே நிறைந்து இருக்கட்டும்.'

நான் அவள் பக்கமாய்ச் சாய்கையில், அவள் வைர மூக்குத்தி ஜ்வலித்தது. தாழம்பூவின் மணம் மனத்தை மயக்கியது. மூடிய கண்ணைத் திறவாது, அவள் என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/35&oldid=590693" இலிருந்து மீள்விக்கப்பட்டது