பக்கம்:பச்சைக்கனவு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 C லா. ச. ராமாமிருதம்

ஏன், எப்படி இருந்தேன்? உன்னிடம் தப்பாக நடந்துகொண்டேனா'

'இல்லை, இல்லை, ஒருக்காலும் இல்லை. சத்தியமாக இல்லை.” ஆவேசத்துடன் அவன் பாதங்களைக் கெட்டி விாகப் பிடித்துக்கொண்டாள். 'என் முகத்தைக்கூட நீங்கள் சரியாகப் பார்த்தீர்களோ, எனக்கு இன்னும் சந்தேகம். பாடும் நேரம்வரை கல்லாலடித்தாற்போல் உட்காந்திருந்து, வேலையானதும் சொல்லிக்கொள்ளாமல் கடப் போய்விடுவீர்களே! என்னோடு எங்கே சரியாய்ப் பேசினர்கள்? நான் ஒருத்தருக்கும் பயப்பட்டதில்லை. ஆனால் உங்களிடத்தில் எனக்கு ஒரு பீதி கண்டது. அது இன்னமுந்தான் இருக்கிறது. உங்களிடம் ஒரு பிரஸ்ன்னம் இருக்கிறது.'

நான் உன் அடிமை.”

"நான்தான் உங்களுக்கு அடிமையானேன். அன்று உங்கள் பாட்டிற்கு அடிமையாகி அதனால் உங்களுக்கு அடிமையாகிவிட்டேன். அன்று நீங்கள் சாமா பாடுகையில் கற்பனை ஸ்வரத்தில் மாமாமாமாமா' என்று ஒரே அக்ஷரத்தை ஐந்து தடவை அழுத்தினர்களே, அதில் ஏதோ ஒரு தருணத்தில், ஒரு மா’வில் உங்களுக்கு என்னை இழந்தேன். அன்று நீங்கள் மா...மா...' என்று எனக்கு என்ன செய்துவிட்டீர்கள், சொல்லுங்களேன்!'

"நான் என்ன செய்தேன்? உன் தகப்பனார் மாதிரி கேட்கிறாயே!”

'இல்லை, மாமாமாமாமா' என்று நீங்கள் உருக்கமாய் இழைக்கையில் திடீரென என் நெஞ்சுள் ஒரு கன்று 'அம்மா’ என்று கதறிற்று. அவ்வளவுதான்; உடனே எனக்கு என்னைச் சுற்றி அம்மா! அம்மா!' என்று ஒரேயடியாய் வெள்ளி மணிகளின் அலறல்தான் கேட்டது. நானே என் வசத்தில் இல்லை. என்னைச் சுற்றி ஒரே நிலமாகிவிட்டது. நீங்கள் நம்பினால் நம்புங்கள்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/87&oldid=590745" இலிருந்து மீள்விக்கப்பட்டது