பக்கம்:பச்சைக்கனவு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாrாயணி C 1ே

வேண்டும்; சரி, போய் வருகிறீர்களா? எனக்கு வேலை இருக்கிறது.'

'அவர் நடத்தை வெடுக்கென்று இருந்தது. ஆனால் நான் ஏன் என்று கேட்டுக் கொள்ளவில்லை. ஏன் எதற்கு என்றெல்லாம் கேட்டுப் பேச்சை வளர்த்த எனக்கு எப்போதுமே பிடிப்பதில்லை. அத்தோடு பாட்டு வாத்தியார் பிழைப்பே இப்படித்தான். நான் பேசாமலே அப்படியே போய் விட்டேன். எனக்கு இதெல்லாம் கேட்டுத் தெரிந்து என்ன ஆகவேனும்?

இதெல்லாம் பற்றி நான் சிந்தனைகூடச் செய்ய வில்லை. ஆனால் மூன்று நாட்கள் கழித்து, மாலை நான் வெளிக்கிளம்பத் தயாராகிக் கொண்டிருக்கையில் அறைக் கதவை டக்டக்கென்று நாசுக்காய் விரல்கனுவால் தட்டும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்தேன். உன் தகப்பனார் நின்று கொண்டிருந்தார்.”

'உள்ளே வரலாமா, மிஸ்டர் பசுபதி?’’

நான் வழி விட்டேன். 'ஹாம்!” சுற்றுமுற்றும் பார்த்தார். நாற்காலி தேடினாரோ என்னவோ? உடை யின் வண்ணான் மடிப்பு கலையாதபடி உடம்பை ஜாக்கிரதையாய் இறக்கிக் கொண்டு பாய்மேல் உட்காந்தார். எனக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டேன்.

'உங்கள் நேரத்தை வீணாக்குகிறேனோ?

அப்படி ஒன்றும் இல்லை. என் நேரம் எனக்குக் காத்துக்கிடக்கும்.'

'சடக்கென நிமிர்ந்து பார்த்தார். மிஸ்டர் பசுபதி, இப்பொழுது உங்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?’ ’

'இதென்ன கேள்வி?

ப- 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/90&oldid=590748" இலிருந்து மீள்விக்கப்பட்டது