பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவட்டத்தில், விழுப்புரத்திற்கு அணித்தாகக், காப்பியாமூர் என்ற ஒர் ஊர் உளது; அஃது இக்காலே கப்பியாமூர் என நெடுமுதல் குறுகி வழங்குகிறது. காப்பியர் பிறந்த ஊராக அதைக் கோடலும் பொருந்தும் என்றும் சில வரலாற்று ஆசிரியர்கள் வகுத்துரைக்கின்றனர். காப்பியர் என்பார், காப்பியக்குடி அல்லது காப்பியாமூர் என்ற ஊரில் பிறந் தமையால், அப்பெயர் பெற்றனர் என்பதாயின், அவர்கள், காப்பியக்குடியினர் அல்லது காப்பியாமூரினர் என்றுதான்் வழங்கப் பெறுவரேயல்லது, காப்பியர் என வழங்கப்பெறுவது பொருந்தாது. ஆகவே அப்பெயர், ஊர்ப்பெயரால் வந்த தன்று; காப்பியர் என்ற குடிப்பெயரால் வந்தது என்று கோடலே பொருந்தும்.

காப்பியர் குடிவந்த இக்காப்பியனுர், காப்பியாறு என்னும் ஊரில் பிறந்து வாழ்ந்தமையால் காப்பியாற்றுக் காப்பியனர் என வழங்கப் பெற்றுளார். காப்பியாறு, தென் திருவாங்கூர் மாவட்டத்துக், கல்குளம் வட்டத்தைச் சேர்ந்ததாகும் என, இக்காலக் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சிலர் கண்டு கூறுகின்றனர். காப்பியாற்றுக் காப்பியனர் தம்பாடல் ஒன்றில், திருவனந்தபுரத்துப் பத்மநாபப்பெருமான் கோயிலைக் குறிப்பதோடு, வடக்குத் தெற்காகக் கிடந்து, மேலைக்கடல் மேகத்தையும், கீழ்க்கடல் கார்முகிலையும் தடுத்துப் பயன் கொள்ளும், மேற்குத்தொடர்ச்சி மலை அமைப்பை அதன் இயற்கை நலம் கெடாவகையில் கூறியுள்ளமை, அவர் பிறந்த காப்பியாற்றைத், தென்திருவாங்கூர் நாட்டினதாகக் கோடுவார் கருத்திற்கு, அரண் செய்வதாக அமைந்துளது.

களங்காய்க்கண்ணி நா ர் மு டி ச் சேரலைப் பாடிய, காப்பியாற்றுக் காப்பியனரின் பாடல்களாகிய, பதிற்றுப்பத்து

நான்காம்பத்தின் பாக்கள்பத்தையும் ஊன்றி நோக்கு

2.