பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புன்புறப் புறவின் கணநிரை அலற அலந்தலை வேலத்து உலவை அஞ்சினைச் சிலம்பி கோலிய அலங்கல் போர்வையின் இலங்கு மணி மிடைந்த பசும்பொன் படலத்து அவிர் இழை தைஇ, மின் உமிழ்வு இலங்கச் சீர்மிகு முத்தம் தைஇய நார் முடி,’ -

பதிற்றுப்பத்து: 39; 9-17

இவ்வாறு, களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலின் நலமெலாம் தோன்றப் பாடிய புலவர், பரிசிற் பொருளாக, நாற்பது நூருயிரம் பொன் பெற்றதோடு, அவன் அரசியல் வருவாயில் பாகமும் கொண்டு பெருக வாழ்ந்திருந்தார்.

5