பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கமழ் குரல் துழாய்

களங்காய்கண்ணிக் நரர்முடிச் சேரலின் சிறப்பறிந்து அவனைக் காணும் விருப்புடையராகிய புலவர் காப்பியாற்றுக் காப்பியளுர், தென் திருவாங்கூர் நாட்டகத்ததாகிய தம் ஊர் விடுத்துச், சேரநாட்டின் தலைநகர் நோக்கிப் புறப்பட்டார் அவ்வாறு புறப்பட்டு வந்தவர், இடைவழியில், பத்மநாபப். பெருமான் கோயில் கொண்டிருக்கும் திருவனந்தபுரத்தைக் காணவே, அந்நகர் புகுந்து அவன் கோயிலே அடைந்தார். சிறியவும் பெரியவுமாய குன்றுகள் ஒருபால்: நின்று காட்சி தர, அலைகள் ஒன்று கூடி, ஓவென ஒலிக்கும் கடல் மற்றொருபால் கிடந்து காட்சிதர, மலைவளத்தாலும், கடற்படு செல்வத்தாலும் வளம்சிறந்து வாழ்வுபெறும் மலையாள நாட்டு மாந்தர் அனைவருமே, ஆங்கு ஒன்று திரண்டு வந்து குழுமியிருப்பதைக் கண்டார். குறை போக்கவும், அருள் பாலிக்கவும் வல்லன் அப்பெருமான் என்பதால், அவன் கோயில் நாடி வந்திருக்கும் அம்மக்கட்கூட்டம், தலைமேல் கூப்பிய கையினராய் நின்று பரவும் ஆரவாரப் பேரொலி, உலகின் நால்வேறு திசைநாடுகளிலும் புகுந்து ஒலிக்கும் பேரொலியாய் ஒலித்துக் கொண்டிருந்தது. பத்மநாபப் பெருமானுக்கு அவ்வப்போது நிகழ்த்தும் சிறப்பும் பூசனையும் குறித்து அடித்து எழுப்பும் மணிகளின் தெளிந்தஓசை, அடியார்களின் வாழ்த்தொலியோடு இரண்டறக் கலந்து ஒலித்துக் கொண்டிருந்தது. அவ்வொலி கேட்டு நிறைந்த காதினராய், உண்ணுது கிடந்து உயர்நிலை வேட்கும் உரவோர்கள், கூட்டமாய் வந்து, தண்ணெக் குளிர்ந்த நீர்த்துறைகளில் மூழ்கி எழுந்து, பெருமான் முன்சென்று, திருமகள் வீற்றிருக்கும் பெருமை வாய்ந்த மார்பில் கிடந்து

11