பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருவி வானம் தண்தனி தலைஇய = இடியும் மின்னலும் போலும் கருவிகளைக் கொண்ட மேகம் பெய்த குளிர்ந்த மழையை வடதெற்கு வி ல ங் கி = வடக்கு தெற்காகக் குறுக்கிட்டு கிடந்து. விலகு தலைத்து எழிலிய = தடுத்த முடிகளை உடையதாய் எழுந்துள்ள. பணிவார் விண்டு விறல் வரை அற்று=குளிர்ந்த பெரிய மலையை ஒப்பதாகும். பரேர் எறுழ் முழவுத்தோள் = பருத்த அழகிய வலிமை மிக்க முழவு போலும் உன்தோள்கள். கடவுள் அஞ்சி = வானவர்க்கு அஞ்சி. வானத்து இழைத்த துங்கு எயில் கதவம் = அவுணர்கள் ஆகாயத்தில் கட்டியிருந்த தூங்கு எயிலின் வாயிற் கதவிற்கு. காவல் கொண்ட எழுஉ நிவந்தன்ன = காப்பாக இட்ட கணேயமரத்தைத் துக்கி நிறுத்தினு ற் போன்று உள்ளன. நீ = நீ, வெண்திரை முந்நீர் வளைஇய உலகத்து = வெண்ணுரை தெறிக்கும் அலைகளையுடைய கடல் சூழ்ந்த இவ்வுலகத்தில். வண்புகழ் நிறுத்த = வளமார் புகழை நிலை பெறப் பண்ணினவனும், வகைசால் செல்வத்து = வகை வகையான செல்வங்களைப் படைத்தவனுமாகிய, வண்டன் அனையை மன் - வண்டன் என்பானைப் பெரிதும் ஒத்திருக்கின்றாய். வண்டு பட ஒலிந்த கூந்தல் = வண்டுகள் வந்து மொய்க்குமாறு தழைத்த கூந்தலும். அறம் சால் கற்பின்= அறம் நிறைந்த கற்பும். குழைக்கு விளக்காகிய ஒண்ணுதல் =காதணியாம் குழையின் ஒளிக்கு விளக்கத்தை வழங்கவல்ல ஒளிவாய்ந்த நெற்றியும். .ெ பா ன் னி ன் இழைக்கு விளக்காகிய அவ்வாங்கு உந்தி = அணிந்திருக்கும் பொன்னல் ஆன அணிகளின் ஒளிக்கு விளக்கம் தரவல்ல பொன்னிறம் பெற்ற, அழகிய, வளைந்த உந்தி போலும் உறுப்புகளால் நலங்கொண்ட மேனியும் உடைய, நின்தொல் நகர்ச் செவ்வி = உன் பெருமனக்கிழத்தி. விசும்பு வழங்கு மகளிருள்ளும் = வானலகத்து மகளிர் உள்ளும், சிறந்த

சிறந்த வளான, செம்மீன் அனையள் = செவ்வொளி வீசும்

20