பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலப்படுத்தும், பொருள்நயம் பொதிந்த வரம்பில் வெள்ளம் என்ற தொடரே, இப்பாட்டிற்கு அணிசெய்து நிற்பதால், இப்பாட்டிற்கு அத்தொடரையே பெயராக்கிப் பெருமை செய்துள்ளார்கள்.

23. இறும்பூதால் பெரிதே; கொடித்தேர் அண்ணல் !

வடிமணி அணைத்த பணைமருள் நோன்தாள் கடிமரத்தான்் களிறு அணைத்து, நெடுநீர துறை கலங்க

5 மூழ்த்து இறுத்த வியன்தான்ையொடு

புலங்கெட நெரிதரும் வரம்பில் வெள்ளம், வாள்மதிலாக, வேல்மிளை உயர்த்து, வில்விசை உமிழ்ந்த வைம்முள் அம்பின் செவ்வாய் எஃகம் வளைஇய அகழின்,

10 கார்இடி உருமின் உரறும் முரசின்

கால் வழங்கு ஆர்எயில் கருதின் போர் எதிர் வேந்தர் ஒருஉப நின்னே’’

துறை வஞ்சித்துறை பாடாண்பாட்டு

வண்ணம்: ஒழுகு வண்ணம்

தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்துாக்கும்

பெயர்: வரம்பில் வெள்ளம்

அண்ணல் ! (1) களிறு அணைத்து (2-3), இறுத்த

தான்ையொடு, நெரிதரும் வரம்பில் வெள்ளம் (4-6), மதிலாக, மிளேஉயர்த்து, அம்பினையும், அகழினையும், முரசினையும் உடைய எயில் கருதின், வேந்தர் ஒருஉப (7-12) இறும்பூது பெரிது.

கொடித்தேர் அண்ணல் அ கொடி அணிந்த தேர்ப்படை மிக்க மன்னவனே. வடிமணி அணைத்த = தெளிந்த ஓசை

36